Specials Stories

மெல்லிசையும் சொல் அசையும்

இசை ஒவ்வொரு மனிதனோட வாழ்க்கையில ஒரு அங்கமாவே இருக்கு. நம்ம சந்தோஷம், துக்கம்-னு எல்லாத்துலையும் இசை கலந்துருக்கும். இப்படி இசை எல்லாருக்கும் புடிக்கும்னா, அப்போ அந்த இசையை அமைச்சவங்களை நமக்கு எவ்ளோ புடிக்கும்.

இசையே நமக்கு ஒரு நண்பன் தான், ஆனா அந்த இசை பல நண்பர்களை உருவாக்கி இருக்கு. அப்படிப்பட்ட ஒரு நட்புக் கூட்டணி தான் நம்ம மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதனும், கவியரசு கண்ணதாசனும். இரண்டு பேரும் இசையை மட்டும் பகிர்ந்துக்கல அவங்க பிறந்தநாளையும் பகிர்ந்துக்கிட்டாங்க. ஜூன் 24 கவியரசர் 1927ல பிறந்து மெல்லிசை மன்னருக்காக ஒரு வருஷம் காத்திருந்தாரோ என்னவோ?

அவர்களுடைய இசை துளிர் விட்டு ஆறு சதாப்தங்களுக்கு மேல ஆகி இருந்தாலும், அந்த மனச வருடி, நம்மையும் அறியாம துள்ளி குதிக்க வைக்கிற இசையும், தத்துவம், காதல், நட்புன்னு இன்னும் பல உண்மைகள் பேசும் பாடல் வரிகளும் இன்னைக்கும் பலரோட தனிமையான இரவுக்கும், இனிமையான இரவுக்கும் சாட்சியா இருக்கு.

“பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது”

இந்த பாட்டும், வரிகளும் என்றைக்கும் பலரோட அனுதின செயல்களுக்கு உதாரணமா நிற்கும்.
நம்ம எல்லாருக்குமே வாழ்க்கையில குழப்பங்கள் வரும், தடுமாறுவோம். அந்த சோகத்துல கூட நம்ம மனசுக்கு ஆறுதலாவும், நமக்கு புத்துணர்ச்சி தரவும் “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா”-ன்ற பாட்டு, ரீமிக்ஸ் காலத்துக்கும் ஏத்த பாட்டா இருக்கு, எல்லாருக்கும் பிடிச்சதாவும் இருக்கு.

எப்பவுமே நாம எல்லாரும் வெற்றியை நோக்கி தான் ஓடிட்டு இருக்கோம், இந்த அதிவேக ஓட்டத்துல நம்மள முந்தி போய் யாராச்சும் வெற்றிக்கனிய எட்டி பறிச்சிட்டா, நம்மக்கிட்ட என்ன குறை இருக்குன்னு தேடும் படலம் தொடங்கிடும். சிலர் நம்மளால முடியாதோன்னு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்குவாங்க. இந்த மாதிரி எண்ணங்கள் வரக்கூடாதுன்னு தான் இந்த பாட்டு.

“எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்,
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே”

இசை ஜாம்பவான்களோட எண்ணம் எல்லாம் எல்லாரும் வாழணும், அதுக்கு எப்படி இருக்கணும்ன்றதுல தான் இருந்து இருக்கு.

“நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை”

எல்லாரும் முன்னேறனும்னு ஒரு பக்கம் இப்படிபட்ட பாடல்கள், இன்னொரு பக்கம், ஸ்டூடியோல இருந்து காதல் வழிஞ்சு, தெருவுல ஒடி இருக்கு அந்த காலத்துலயே !

இசையில காதலும், இசைக்கான காதலும் என்னிக்குமே நிலைச்சு நிற்கும். நம்ம மனசுல இருந்து பேச நினைக்குறத நமக்கு புடிச்சவங்க பேசுனா, அப்போ வர்ற சந்தோஷத்தை நம்மளால சொல்லவே முடியாது. ஆனா அந்த சந்தோஷத்தை கூட இவங்க “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”-னு பாடல் மூலமா சந்தோஷத்துக்கு உருவம் கொடுத்து இருக்காங்க.

நம்ம வாழ்க்கையில நல்ல விஷயங்கள் நடக்குற மாதிரி, நமக்கு எதிராகவும் சில விஷயங்கள் நடக்கும். அப்படி நடக்குற விஷயங்களை நம்ம பல இடங்கள்-ல சமாளிக்க தவறிடுறோம். இந்த மாதிரி சூழ்நிலைகளுக்கு இந்த காலகட்டத்துல பல பாடல்கள் இருந்தாலும், “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே”-ன்னு பாடிக்கிட்டே நமக்கு தொந்தரவு கொடுக்குறவங்கள கடந்து போனா, நாம கெத்து தான்.

நிறைவா ஒன்னு. நம்ம மனிதர்களுக்கு மட்டுமல்லாம, இறைவனுக்கும் அவர்களுடைய பாடல் மேல மயக்கம் வந்த மாதிரி அந்த இறைவனே இறங்கி வந்து “உள்ளத்தில் நல்ல உள்ளம்”-னு பாடுன மாதிரி நம்ம மனசுல இன்னும் அந்த பாடல்கள் ரீங்காரமா ஒலிச்சிக்கிட்டே இருக்கு. மெல்லிசை மன்னர், கவியரசரோட பாடல்கள்ல ஒரு பத்து பாட்ட லிஸ்ட்டு போட்டு நிறுத்திட முடியாது, ஏன்னா எல்லாமே வேற லெவல்.

இப்படி நம்ம வாழ்க்கைக்கு நடக்குற எல்லா நிகழ்வுகளுக்கும் ஏத்த மாதிரி உணர்ச்சி பூர்வமான வரிகளோட, உன்னதமான இசையமைச்சு கொடுத்த இந்த ஜாம்பவான்களை வாழ்த்த வயதில்லை, அதுனால அவங்க பாட்ட கேட்டு வாழ்வோம். நிறைவா! மகிழ்ச்சி.

Article By Karthik

About the author

alex lew