Specials Stories

திரைக்கடலில் நீந்தும் தங்க மீ(னா)னம்மா !!!

கண்ணழகி “மீனா”. இந்திய சினிமாக் கடல்ல அன்றிலிருந்து இன்றுவரை எங்கயும் நிக்காம நீந்திகிட்டே இருக்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச சினிமாவின் Dol(l)phin மீன்னு சொல்லலாம்.

நமக்கு நடிப்பு அப்படின்ற வார்த்தைய கேட்டாலே முதல்ல ஞாபகம் வர்றது நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா. ஒரு சின்ன Birthday Partyல நடிகை மீனா சிவாஜி ஐயாக்கு அறிமுகம் ஆகுறாங்க. அதுக்கப்பறம் சிவாஜி ஐயா மூலமாகவே 1982வது வருஷத்துல “நெஞ்சங்கள்”-ன்ற படத்துல குழந்தை நட்சத்திரமா Kollywood-க்கு அறிமுகம் ஆகுறாங்க நடிகை மீனா.

South Indian Actress Meena Hot Images

குழந்தை நட்சத்திரமாவே கிட்டத்தட்ட 45 படங்கள் நடிச்சு இருங்காங்க மீனா, அதுல பல படங்கள் சிவாஜி ஐயா கூடவும் நடிச்சிருக்காங்க. ஆனா குழந்தை நட்சத்திரமா மீனா எல்லா இடத்துலையும் நட்சத்திரமா ஜொலிக்க காரணமான ஒரு படம் “அன்புள்ள ரஜினிகாந்த்”. இன்னைக்கு வரை ரஜினி Uncle-னு நம்ம மீனா சொல்ற வசனம் யாராலையும் மறக்கவே முடியாது. Superstar கூட “அன்புள்ள ரஜினிகாந்த்”, “எங்கேயோ கேட்ட குரல்”-னு 2 படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்காங்க மீனா.

பொதுவா குழந்தை நட்சத்திரமா நடிச்ச எல்லாருமே சினிமால எதிர்காலத்துல மிகப்பெரிய நடிகராவோ, நடிகையாவோ வருவாங்களானு தெரியாது, ஆனா நம்ம மீனாக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும் நாம தான் தென்னிந்திய சினிமாவ கலக்க போறோம்னு.

1990ல “நவயுகம்”-ன்ற தெலுங்கு படத்தில கதாநாயகியா அறிமுகமான மீனா அதே வருஷத்துல “ஒரு புதிய கதை”-ன்ற படம் மூலமா தமிழ் சினிமால கதாநாயகியா அறிமுகமாகுறாங்க.

Mohanlal welcomes Meena to Drishyam 2 set on her 44th birthday - Movies News

கதாநாயகி மீனாக்கு திருப்புமுனையா அமைஞ்ச முதல் படம் ராஜ்கிரண் அவர்கள் நடிப்புல வந்த “என் ராசாவின் மனசிலே” படம் தான், இன்னும் அந்த சோலையம்மாவ யாராலையும் மறக்க முடியாது

அதுக்கப்பறம் வரிசையா தென்னிந்திய மொழிகள்ல பல படங்கள் நடிச்ச நம்ம மீனாக்கு இன்னும் பல புகழ் வாங்கி தந்த படங்கள் Superstar கூட நடிச்ச எஜமான், வீரா, முத்து, கேப்டன் கூட நடிச்ச சேதுபதி IPS, உலக நாயாகனோட நடிச்சு வெளிவந்த அவ்வை சண்முகி, சத்யராஜ் கூட நடிச்ச மாமன் மகள், சரத்குமாரோட நடிச்ச நாட்டாமை, கார்த்திக் மற்றும் தல அஜத்தோட நடிச்ச ஆனந்த பூங்காற்றேனு இப்படி பல படங்களை சொல்லலாம்.

தளபதி விஜய் கூட மீனா அவர்கள் நடிக்கலனாலும் ஷாஜகான் படத்துல ஆடின ‘சரக்கு வச்சிருக்கேன்’ பாட்டு பட்டி ,தொட்டி, சிட்டினு எல்லா இடத்துலையும் ஹிட்டு.

நடிப்பையும் தாண்டி நம்ம மீனாக்கிட்ட பல திறமைகள் இருக்கு ,Trained பரதநாட்டியம் Dancer, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி, இங்கிலீஷ்-னு 6 மொழிகள் தெரியும், அதோட நல்ல பாடிகியும் கூட நம்ம மீனா.

80’s, 90’s, early 2k kidsனு எல்லோராட Favorite ஆன நம்ம மீனா இன்னும் நிறைய படங்கள் பண்ணும்னு நாம யோசிக்கும் போது அண்ணாத்த படத்தோட அறிவிப்பு வெளிவந்தது. மறுபடியும் ஒரு முறை Superstar ரஜினிகாந்த் & மீனா கூட்டணியை வர்ற தீபாவளிக்கு பார்க்க போறோம்.

“கண்ணழகி” மீனா அவர்கள் இன்னும் பல நல்ல படங்கள்ல நடிச்சு சினிமால எப்பவும் சிகரத்தில் இருக்க Suryan Fm-ன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  • by RJ SRINI, TRICHY.

About the author

alex lew