Specials Stories

இது வெட்கப் பட வேண்டிய விஷயம் இல்ல; பேசி தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!

மாதவிடாய் பற்றி மத்தவங்க முன்னாடி பேச கூடாது, சத்தம் போட்டு பேச கூடாது, ஆண்கள் முன்னாடி பேச கூடாது, ஏன் மெடிக்கல் ஷாப் ல நாப்கின் வாங்கணும்னாலும் அத சத்தமா கேட்காம ஒரு பேப்பர் ல எழுதி காமிச்ச காலம் மாறி, இப்போ எல்லாம் periods, mood swing பத்தி social media ல daily reels போடுறாங்களே…

இது மூடி வைக்க வேண்டிய விஷயம் இல்ல, எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தான்… மே 28 மாதவிடாய் சுகாதார நாள்… மாதவிடாய் நாட்கள்ல சுகாதாரம் ரொம்ப முக்கியம். சுத்தமான தண்ணீர்ல பெண் உறுப்பை சுத்தமா கழுவனும், அதிக chemicals உள்ள சோப் பயன்படுத்த கூடாது.

Flow கம்மியா இருந்தாலும் சரியான இடைவேளைல நாப்கின் மாற்றனும், அப்போ தான் நம்ம கிட்ட கெட்ட வாசம் இருக்காது, சுத்தமான கழிவறை பயன்படுத்தனும், பயன்படுத்திய நாப்கின்களை முறையா அப்புறப் படுத்தனும், உள்ளாடைகளை சுத்தமா துவைச்சு நல்ல வெயில்ல காய வைக்கணும்.

அதிக chemicals கொண்ட intimate wash பயன்படுத்தாதீங்க, பெண் உறுப்பில் அடிக்கடி எரிச்சல் அரிப்பு இருந்தா அதா அசால்ட்டா விடாம மருத்துவர் ஆலோசனை எடுத்துக்கோங்க. ஏன்னா சுகாதாரம் இல்லாத மாதவிடாய் infection-ல இருந்து cancer வரைக்கும் கொண்டு போய்டும், அதுனால கவனமா இருங்க.

மேலும் மாதவிடாய் நாட்கள் ல ஆரோக்யமான உணவுகளை எடுத்துக்கோங்க. இது பேசி தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் பேச வெட்க பட வேண்டிய விஷயம் இல்ல.

Article By RJ Karunya