Cinema News Specials Stories

Inspirational இசையாமைப்பாளர் விஸ்வநாதன்!

MSV

பழைய பாட்டு ஒரு 10 சொல்லுன்னு கேட்டா அதோ அந்த பறவை, மலர்ந்தும் மலராத, பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அவளுக்கென்ன, அழகிய தமிழ்மகள் இவள், தெய்வம் தந்த வீடுன்னு நம்ம சொல்ற பாட்டுல முக்கால்வாசி இல்ல சில சமயங்கள்ல முழுசுமே இந்த மெல்லிசை மன்னர் compose பண்ணதா தான் இருக்கும்.

இப்படி Mgr காலம் தொடங்கி ரஜினியோட நான் பொல்லாதவன், வெத்தலைய போட்டேன்டி, தில்லு முல்லு, பாக்யராஜோட அந்த 7 நாட்கள் படம்னு 80’s 90’s வரை இவரு இசை சாம்ராஜ்யம் 800-க்கும் அதிகமான படங்களோட அசைக்க முடியாத அரண்மனையா ஜொலிச்சுது. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க சின்ன வயசுல இவரோட ஆசை எல்லாம் நடிக்கறதுலயும் பாடுறதுலயும் தான் இருந்துருக்கு. ஆனா இவருக்கான சரியான இடம் இசையமைக்குறது தான் அப்படினு இவருக்கு புலப்பட வெச்சது T.R.பாப்பா அப்படிங்குற Music composer தான்.

எம்எஸ் விஸ்வநாதன்... காற்றுள்ள வரை காதுகளில் ரீங்கரிக்கும் ஒரு மாபெரும்  கலைஞன்! | Complete biography of MS Viswanathan - Tamil Oneindia

அதுக்கப்பறம் வெவ்வேறு Music troupes-ல work பண்ண இவரு ஒரு கட்டத்துல இவரோட இணை இசையமைப்பாளரான T.K.Ramamoorthy-அ சந்திக்கிறாரு. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல அவரோட இணைந்து பணியாற்றி மெல்லிசை மன்னர்கள்-ன்ற பேரையும் 1963-லயே வாங்குனாங்க. அதுக்கு பிறகு 500-க்கும் அதிகமான படங்களை Solo-வா Compose பண்ணி திரை இசை சக்ரவர்த்தி-ன்ற பேருக்கும் சொந்தக்காரர் ஆனாரு MSV.

ஆனா இவ்ளோ புகழும் இவருக்கு தொட்டதும் கிடைக்கல ஒரு theatre-ல தொடங்குன சின்ன வேலை மூலமா தான் இவரு திரை பயணம் ஆரமிச்சுது. அதுக்கப்பறம் 3 ரூபாய் சம்பளத்தோட ஒரு Production கம்பெனில வேலைனு கடைசில நூற்றுக்கணக்கான படங்களோட பாடல்களை Production பண்ணி Composition king-ஆ அசத்துனாரு. Late 90’s, 2K’s ல வந்த Emotion நிறைஞ்ச பாடல்களான விடை கொடு எங்கள் நாடே, மழைத்துளி மழைத்துளி பாட்டுல வர ‘ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்’ வரிகளை இவரு குரல்லயே கேக்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும்.

M.S. Viswanathan

Emotions போதும் கொஞ்சம் Entertainment-க்கு வருவோம். காதல் மன்னன் படத்துல மெஸ் நடத்துற மெஸ் விஸ்வநாதன், காதலா காதலா படத்துல முருகர் பேர மூச்சுக்கு முன்னூறு தடவ சொல்ற Ramba-வோட அப்பா Role-னு தன்னோட கடைசி நாட்கள்ல கூட Entertainment-க்கு பஞ்சம் இல்லாம Extra punch-ஆ, தான் Compose பண்ண தில்லு முல்லு பாட்டயே Yuvan கூட சேர்ந்து 2013-ல வந்த தில்லு முல்லு படத்துக்காக ரீமேக் பண்ணி இருப்பாரு நம்ம MSV.

இன்னைக்கு கேட்டாலும் இந்த குரல திரும்ப கேக்க முடியாதான்னு தோண வைக்குற ஸ்வர்ணலதாவ Playback singer-ஆ இந்த இசை உலகத்துக்கு கொண்டுவந்ததும் இவரு தான். இத்தனை கால இசை பயணம் மூலமா இசை உலகத்துக்கு மட்டுமில்ல திரை உலகத்துக்கே ஒரு பெரிய Inspiration-னா இருக்கார் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன்.

Article By RJ THAARA