Specials Stories

பார்கோர் எனும் அற்புத கலை!

பார்கோர் அப்டினா டக்குனு உங்க நியாபகத்துக்கு என்ன வருது? நிறைய பேருக்கு Parker Pen தான் நியாபகத்துக்கு வரும். ஆனா நாம பாக்க போற Parkour வேற.

‘அயன்’ படத்துல வைரத்த திருடிட்டு போறவன் ஒருத்தன சூர்யா சேஸிங் பண்ணி துரத்திட்டு போவார்… அந்த காட்சி நியாபகம் இருக்கா?

வழில யார் வந்தாலும், என்ன தடை வந்தாலும் அத தாண்டி எகிறி குதிச்சு, பல்டி அடிச்சு, சுவத்துல கால் வச்சு தாண்டுறது அப்டி இப்டினு தாண்டி தாண்டி அவங்க ஓடுற Speed மட்டும் குறையவே குறையாது.

இதே மாதிரி உலகம் முழுக்க நிறைய சண்டை படங்கள், சேஸிங் காட்சிகள்ல வில்லன் ஹீரோவ துரத்திட்டு ஓடிட்டே இருப்பாங்க. பில்டிங் விட்டு பில்டிங் தாவிட்டே இருப்பாங்க. ‘ஐ’ படத்துல ஐலா ஐலா ஐ பாட்டுல விக்ரம், எமி ஜாக்சன் கட்டடங்கள் மேல தெருக்களுக்கு நடுல ஓடுவாங்க… அதுவும் பார்கோர் தான்.

பார்கோர் வர்றதுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடியே பல இடங்கள்ல வெவ்வேறு விதமான அதே போன்ற கலைகள் இருந்திருக்கு. ஆப்பிரிக்க பழங்குடியினர் கிட்ட இருந்திருக்கு, சீன கலாச்சாரத்துல Qinggong அப்படிங்குற கலை வடிவத்துல இருந்திருக்கு. அதுமட்டுமில்ல 20ஆம் நூற்றாண்டுல Peking Opera School-ல இத சொல்லிக் குடுத்துருக்காங்க. அங்க படிச்ச மாணவர் தான் நம்ம ஜாக்கி சான்.

இப்படி பல இடங்கள்ல பார்கோர்க்கு முன்னோடியான கலைகள் இருந்தாலும் பார்கோர் முழுமையான உருவான இடம் எது அப்டினா பிரான்ஸ் இராணுவம் தான். அதுக்கு விதை போட்டவர் French கடற்படை அதிகாரி Georges Hebert.

VIDEO CRECITS : SAMAL TV

முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் தடகள பயிற்சி வழங்கி வந்தார். ஆப்பிரிக்காவில் பழங்குடியின மக்களுடன் பழகிய சமயத்தில் அவர்களுடைய உடலை பார்த்து வியந்து போனார். அவர்களது உடல் வலுவாக, பாதுகாப்பானதாக, எதிர்ப்பு சக்தி மிக்கதாக இருப்பதை கவனித்தார்.

1902-ல் நிகழ்ந்த Mount Pelée எனும் எரிமலை வெடிப்பில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது, பொதுசேவையில் தைரியத்துடன் ஈடுபடுவர்களுக்கு தடகள பயிற்சிகளை கட்டாயம் சொல்லித் தர வேண்டுமென நினைத்தார். ஆப்பிரிக்க பழங்குடி மக்களின் வலிமையான உடல் மற்றும் எரிமலை வெடிப்பு மீட்பு பணி அனுபவங்கள் இரண்டையும் ஒன்றிணைத்து Méthode Naturelle எனும் பயிற்சி முறையை உருவாக்கினார்.

Lieutenant Hébert.jpg

Walking, Running, Jumping, Crawling, Climbing, Balancing, Throwing, Lifting, Self-defence & swimming ஆகிய 10 பயிற்சிகள் இணைந்ததே Méthode Naturelle பயிற்சி முறை. இதன் மூலம் உடல் மற்றும் மன வலிமையை வலுவாக்கி மேம்பட வைத்தார். இந்த பயிற்சியை French இராணுவ வீரர்களுக்கு கற்றுக்கொடுத்தார். காலப்போக்கில் அது இராணுவத்தினருக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் பயிற்சியாக மாறியது.

Hebert-ன் பயிற்சிகளால் ஈர்க்கப்பட்ட ஒருவர் முதன்முதலாக இராணுவத்தினருக்கான தடை தாண்டும் பயிற்சிக்கான ஒரு இடத்தை வடிவமைத்தார். அந்த இடத்தை மேற்கூறிய அனைத்து பயிற்சிகளும் இடம்பெறும் வகையில் இராணுவத்தினர் பயிற்சி பெறும் ஒரு இடமாக வடிவமைத்தார். இதுவே தற்போது இராணுவத்தினருக்கான நிரந்தர பயிற்சியாக மாறியுள்ளது.

அடுத்ததா நாம பாக்க போறது David Belle. சின்ன வயசுல David Belle வியட்நாம்ல இருந்தப்போ இவருடைய அப்பா Raymond கிட்ட இருந்து இந்த பார்கோர கத்துக்கிட்டாரு. David Belle பத்தி தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி நாம கண்டிப்பா Raymond Belle பத்தி தெரிஞ்சுக்கனும்.

No photo description available.

1946-ல முதல் Indochina War நடக்குது. இந்த போர்ல ஆதரவற்ற குழந்தையா 7 வயசுல DaLat அப்டிங்குற City-க்கு French மிலிட்டரியால கொண்டு வரப்படுறார் David Belle-ன் அப்பா Raymond. சின்ன வயசுல தனியா இருந்ததால சுத்தி இருக்க பலரால பாதிப்புக்கு ஆளாகிறார். அவங்களை எதிர்த்து நிக்கனும்னா நாம அவங்கள விட Strong ஆகனும்னு நினைக்குறார். அதனால் Fitness-ல அதிக கவனம் செலுத்தி தன்னை Strong-ஆன ஆளா மாத்திக்க முயற்சி செய்றார்.

இராணுவத்துல இருக்க ஆதரவற்ற குழந்தைகள் முகாம்ல வளர்ந்ததால சின்ன வயசுல இருந்தே Raymond இராணுவ பயிற்சிகளை கத்துக்குறார். அதுல வெவ்வேறு மாதிரியான தடைகளை தாண்டுவதற்கான பயிற்சிகள் பண்றாரு. படிப்படியா அது மேல ஆர்வம் அதிகமாகி யாருக்கும் தெரியாம இரவு நேரங்கள்ல கூட இந்த பயிற்சிய பண்ண ஆரம்பிக்கிறார்.

பல மணி நேரங்கள் திறந்த வெளில தடைகளை உருவாக்கி அதை தாண்டி தாண்டி பயிற்சி பண்றாரு. இதுல இவரு புதுசா என்ன கண்டுபிடிக்குறார் அப்படினா, துளி கூட சத்தம் கேக்காம எப்படி தடைகளை தாண்டுறதுனும், அதிக உயரங்கள்ல இருந்து அடிபடாம சத்தமில்லாம எப்படி குதிக்குறதுனும் கண்டுபிடிக்குறாரு. அவர் கண்டுபிடிக்குற விஷயங்கள ஒரு கலையா வடிவமைக்குறாரு. அந்த கலை வடிவம் தான் இன்னைக்கு நாம பாக்குற பார்கோர்.

David Belle [PARKOUR] | STRONGER - YouTube

1954-ல போர் முடிவுக்கு வந்ததும் France திரும்புறார். தொடர்ந்து இராணுவ பள்ளிலயே படிக்குறார். 1958-ல அவருக்கு ப்ரெஞ்சு குடியுரிமை கிடைக்குது. படிப்ப முடிச்சதுக்கு அப்புறம் தீயணைப்புத் துறைல சேர்ந்து அங்க கூட வேலை செய்றவங்களுக்கு இந்த தடை தாண்டும் பயிற்சிய கத்துக்கொடுக்குறாரு. இப்படி இவரு வாழ்க்கை போகுது.

அடுத்ததா புலிக்கு பிறந்தது பூனையாகுமா அப்படிங்குற மாதிரி Raymond மகன் David Belle வர்றாரு. அவரு சின்ன வயசுல பள்ளிக்கூடம் போறாரு வர்றாரு, Sports Clubs-ல விளையாடப் போறாரு வர்றாரு, Gymnastics, athletics கத்துக்குறாரு, ஆனா பெருசா எதுலயும் ஆர்வம் ஈடுபாடு இல்லாம இருக்காரு. ஒரு கட்டத்துல தன்னுடைய அப்பாவ பத்தியும் அவருடைய பயிற்சிகள் பத்தியும் David Belle-க்கு தெரிய வந்து அவருடைய அப்பாகிட்ட அத பத்தி முழுமையா கேட்டு தெரிஞ்சுக்குறாரு. நிறைய பேசுறாரு. அவரு அப்பா அந்த பயிற்சிய எந்த மாதிரி கொண்டு போகனும்னு நினைச்சாரும்னும் தெரிஞ்சுக்குறாரு.

பார்கோர் அப்படிங்குறது வெறும் விளையாட்டுத்தனமான பயிற்சி இல்ல, உடல் வலிமை மன வலிமை அனைத்தையும் ஒருங்கிணைச்சு ஒரு இக்கட்டான சூழல்ல தான் நேசிக்குற மக்கள பாதுகாக்குறதுக்காக பயன்படுத்தக் கூடிய கலை தான் பார்க்கோர் அப்படினு புரிஞ்சுக்குறார். இதனால் தான் மக்களை காப்பாத்தக் கூடிய பணியில் இருக்கவங்களுக்கு பார்கோர் பயிற்சி கட்டாயமா தேவைன்னும் தெரிஞ்சுக்குறார்.

அந்த சமயத்துல இருந்து அதீத ஈடுபாட்டோட தன்னோட கவனம் முழுசையும் பார்கோர் பக்கம் திருப்பி பயிற்சி பண்ண ஆரம்பிக்கிறார். ஆரம்பத்துல தனியா பயிற்சி பண்றார், போகப்போக அவரு மாதிரியே பார்கோர் பயிற்சிகள் மீது ஆர்வமா இருக்க சிலர சந்திக்கிறார். எல்லாரும் ஒன்னா சேர்ந்து பயிற்சி பண்ண ஆரம்பிக்கிறாங்க. அவங்க குழுவுக்கு Yamakasi அப்படிங்குற பெயர் சூட்டுறாங்க.

VIDEO CREDITS : DAVID BELLE

இந்த Yamakasi குழு ஆசிய தற்காப்பு கலைகள், ஜாக்கிசானின் தற்காப்பு பயிற்சி முறை, ப்ரூஸ்லியின் தற்காப்பு பயிற்சி முறை, Belgian actor Jean-Claude Van Damme-ன் தற்காப்பு பயிற்சி முறை மற்றும் ஜப்பானின் மங்கா Anime Series-ல் வரும் தற்காப்பு பயிற்சி முறைனு பல விசயங்களால் ஈர்க்கப்படுறாங்க. ஒவ்வொன்னுல இருந்து ஒவ்வொரு விஷயம் கத்துக்குறாங்க. கடுமையா தொடர்ந்து நேரம் தவறாம வெறி கொண்டு பார்கோர் பயிற்சில ஈடுபடுறாங்க.

உடல் மற்றும் மன வலிமைய அதிகரிக்குறதுக்கான அனைத்து பயிற்சிகளையும் கண்டுபிடிச்சு செய்றாங்க. உதாரணமா Stamina-வ தெரிஞ்சுக்க சாப்பாடு, தண்ணி இல்லாம பயிற்சி பண்றது, சளி காய்ச்சல்ல எதிர்ப்பு சக்திய அதிகரிக்க போர்வை கூட இல்லாம வெறும் தரைல படுத்து தூங்குறது இந்த மாதிரியான கடுமையான பயிற்சிகள் செய்றாங்க. இதுக்காக அவங்க குழுல சில விதிமுறைகளும் இருக்கு.

VIDEO CREDITS : JULIE ANGEL MOVEMENT COACH

1. முதல்ல குறிச்ச நேரத்துக்கு எல்லாரும் இருக்கனும். இல்லனா அது எல்லாரையும் பாதிக்கும். 2. கடினமான பயிற்சிகள் மேற்கொள்ளனும்னா எல்லாருடைய ஒப்புதலும் வேணும். 3. ஒவ்வொருத்தருக்கும் அவங்கள உடலுடைய பாதுகாப்பு லிமிட் தெரிஞ்சுருக்கனும். 4. பார்கோர்ல புதுசா ஒரு கஷ்டமான movement பண்ண கத்துக்குறாங்கனா group-ல இருக்க எல்லாரும் அந்த movement பண்ணா தான் அத consider பண்ணுவாங்க. இல்லனா அத reject பண்ணிடுவாங்க. 5. யாருக்கும் தெரியாம யாரும் பண்ணாத ஒரு புது movement-அ யாரும் வேற இடத்துல செய்ய கூடாது.

இந்த மாதிரியான பல விதிமுறைகள உருவாக்கி, குழுவினர் அனைவரும் கடும்பயிற்சி மேற்கொண்டு வளர்ந்தாங்க. 1997-ல பாரிஸ்ல மக்கள் முன்னாடி Firefighter show பண்றாங்க. இதுல மக்கள் முன்னாடி தங்களுடைய பார்கோர் திறமைய செஞ்சு காமிக்குறாங்க. இது பல தொலைக்காட்சிகள்லயும் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெறுது. பார்க்கோர் கொஞ்சம் கொஞ்சமா தனது எல்லைய அதிகரிக்குது. பல இடங்கள்ல இவங்கள வரவேற்குறாங்க. கொஞ்ச நாட்கள்ல அவங்க டீம்க்குள்ள சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிஞ்சுடுறாங்க.

VIDEO CREDITS : CHENNAI PARKOUR

இப்பொழுது உலகின் பல்வேறு இடங்களில் பார்கோர் தனது கால் தடத்தை பதித்து விட்டது. ஏன் தமிழகத்தில் கூட சென்னையில் பார்க்கோர் கடந்த சில வருடங்களில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. மிக முக்கியமான விஷயம், இந்த கலையை இளைஞர்கள் மட்டுமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண் பெண் பேதமின்றி கற்று வருகின்றனர். யோகா, கராத்தே, உடற்பயிற்சி இவை போல பார்க்கோரும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் கலையாக மக்களால் வரவேற்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இது ஒரு பாதுகாப்பற்ற கலையாக பலராலும் பார்க்கப்படுகிறது. ஒரு முழு அங்கீகாரம் பெற்ற கலையாக, போட்டிகள் நடத்தும் விதத்தில் பார்க்கோரை கொண்டு வருவதற்கான பல்வேறு முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

VIDEO CREDITS : CHENNAI PARKOUR

இதையெல்லாம் ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு பார்த்தால் பார்க்கோர் ஒரு சாதாரண கலை கிடையாது. அசாதாரணமானது. உடலையும் மனதையும் ஒன்றிணைத்து நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கக் கூடியது. அது தரும் ஆற்றல் அளவில்லாதது. அதுவே அந்த கலையை வரும் காலங்களிலும் ஒளிர வைத்துக் கொண்டிருக்கும்.

Article By MaNo