Specials Stories

பாலஸ்தீன், இஸ்ரேல் பிரச்னை என்னனு தெரியுமா?

என்ன தம்பி இந்த பக்கம்… இது ரத்த பூமி… இங்க குழாய திறந்தா தண்ணி வராது ரத்தம் தான் வரும்… இப்படி வடிவேலு பேசுன வசனங்கள் ரொம்ப காமெடியா நமக்கு தெரிஞ்சாலும்… பாலஸ்தீனோட கதைய கேட்டுட்டு இந்த வசனங்கள சொல்லிப் பாத்திங்கனா அது ரொம்ப சோகமா, நம்ம மனச பாதிக்கக் கூடியதா இருக்கும்.

பெரும்பாலும் உலகச் செய்திகள் பாக்குறவங்களுக்கு, உலகப் போர்கள் பத்தி தெரிஞ்சவங்களுக்கு பாலஸ்தீன், இஸ்ரேல் பிரச்னை பத்தின விஷயங்கள் தெரியும். ஆனா இப்ப இருக்க பலருக்கும், குறிப்பா இன்னைக்கு இருக்க இளம் தலைமுறைக்கும் இந்த போர் பத்தின விஷயங்கள் பெருசா தெரியல.

இப்ப கிட்டத்தட்ட 4,500 வருசங்களுக்கு முன்னாடி போவோம். கி.மு.2500… ஆபிரகாம் அப்படிங்குற மன்னர் பாலஸ்தீன் நிலப்பரப்ப ஆட்சி செஞ்சுட்டு இருந்தாரு. அவருக்கு 2 மனைவி. முதல் மனைவி சாரா… சாராக்கு பிறந்த குழந்தை ஐசக். ஐசக் வழி வரவங்க யூதர்கள். 2வது மனைவி ஆகான்… ஆகானுக்கு பிறந்த மகன் இஸ்மாயில். இஸ்மாயில் வழி வரவங்க அரேபியர்கள்.

யூதர்கள், அரேபியர்கள் 2 பேருக்கும் பொதுவான இடம் தான் பாலஸ்தீன். 2 வம்சமும் ஆபிரகாம் மன்னர தான் வணங்குறாங்க. கி.மு.1700 காலகட்டத்துல மிக மோசமான பஞ்சம் காரணமா பாலஸ்தீன்ல இருந்த யூதர்கள் எகிப்துல போய் வேல செய்றாங்க. யூதரகளோட திறமைய பாத்து, அப்ப அங்க இருந்த எகிப்து மன்னன் யூதர்கள அடிமையாக்கி வேலை வாங்குறாரு.

200 வருசத்துக்கு பின்னாடி அந்த மக்கள் நாங்க எங்க நாட்டுக்கே போறோம்னு மோசஸ் உதவியோட திரும்ப பாலஸ்தீனுக்கு வராங்க. அதுக்கு பின்னாடியும் பாலஸ்தீன் எகிப்தியர்கள், ரோமானியர்கள், பாபிலோனியர்கள்னு பலராலயும் போர் நெருக்கடிக்குள்ளாகி அவர்களால ஆட்சி செய்யப்படுது. யூதர்கள் அங்கங்க பிரிஞ்சு பல நாடுகள்ல போய் தஞ்சமடையுறாங்க. பாலஸ்தீன்லயும் யூதர்கள் இருக்காங்க.

கிமு 1000-ல தாவீது இஸ்ரேல் அப்படிங்குற மன்னர் அப்போதைய பாலஸ்தீன நிலப்பரப்ப ஆட்சி செஞ்சாரு. அதோட தலைநகரம் ஜெருசலேம்னு அறிவிக்குறாரு. அவரோட மகன் சாலமன் ஜெருசலேம்ல ஒரு புகழ்வாய்ந்த கோவில கட்றாரு. இப்போ ஏசு காலத்துக்கு வருவோம். ஏசு பிறக்குறார். இறை தூதரா மக்கள் அவர கொண்டாடுறாங்க. ஆனா அது பிடிக்காத ரோமானிய மன்னர் ஏசுவுக்கு மரண தண்டனை கொடுத்து சிலுவைல அறையுறாரு. ஏசு மரணித்து உயிர்த்தெழுறாரு.

கிறித்துவ மதம் உருவாகுது. ஆனா யூதர்கள் பலரும் கிறித்துவ மதத்த ஏற்க மறுக்குறாங்க. கடைசியா ஏசு அறையப்பட்ட சிலுவை ஜெருசலேம்ல இருந்ததா சொல்றாங்க. கிபி 6 ஆம் நூற்றாண்டுல நபிகள் நாயகம் வராரு. இஸ்லாமிய மதம் உருவாகுது. அரேபியர்கள் பலரும் இஸ்லாம் மார்க்கத்த பின் தொடருறாங்க. நபிகள் நாயகம் ஜெருசலேம்ல இருந்து தான் சொர்க்கத்துக்கு போனதா சொல்றாங்க. இப்படி யூதர்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாருக்கும் முக்கிய புனித தலமா ஜெருசலேம் இருக்கு.

இதுக்கு நடுல பாலஸ்தீன்ல பல படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் எல்லாம் நடக்குது. யூதர்கள் பலர் வேற நாடுகளுக்கு புலம் பெயருறாங்க. கிறித்துவ மதம் பெருசாகுது. சில வருசங்களுக்கு பின்னாடி யூதர்கள் தான் ஏசுவ கொன்னாங்க அப்படின்னு கிறித்தவர்கள் நினைக்குறாங்க. கிறித்தவர்களுக்கு யூதர்கள் மேல வெறுப்பு ஏற்படுது. இந்த சமயத்துல ஜெருசலேம்ல அரபு இஸ்லாமியர்கள் தான் அதிகமா இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சம் யூதர்கள், கிறிஸ்துவர்கள் இருக்காங்க.

ஒரு கட்டத்துல உலகம் முழுக்க இருக்க கிறிஸ்துவர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து நம்ம புனித தலம் ஜெருசலேம், அத அரபு இஸ்லாமியர்கள் கிட்ட இருந்து மீட்கனும்னு சிலுவை ஏந்திட்டு ஜெருசலேம் மேல போர் தொடுக்குறாங்க. இந்த சிலுவைப்போர் பல வருசங்களுக்கு தொடருது. கிபி 11 ஆம் நூற்றாண்டுல முதல் சிலுவைப் போர் தொடங்கி 12 ஆம் நூற்றாண்டு வரை மொத்தம் 5 சிலுவைப் போர்கள் நடக்குது. இதுல இஸ்லாமியர்கள் மட்டுமில்லாம யூதர்களும் கிறித்துவர்களால கொல்லப்படுறாங்க.

பதிலுக்கு கிறித்துவர்கள் பலரும் இஸ்லாமியர்களல கொல்லப்படுறாங்க. மாறி மாறி ஆட்சிய பிடிக்குறாங்க. இப்படி ஜெருசலேம் பல படையெடுப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் ஆளானாலும் அத்தன தடவையும் மீண்டு வருது. அதுக்கு பின்னாடி கிபி 15ஆம் நூற்றாண்டுல இருந்து முதல் உலகப்போர் வரைக்கும் துருக்கியர்களோட ஆதிக்கத்துல பாலஸ்தீனம் இருந்துச்சு. இந்த சமயத்துலயும் பாலஸ்தீன்ல பெரும்பான்மையா அரேபியர்கள் இருக்காங்க. சிறுபான்மையா யூதர்களும், கிறித்தவர்களும் இருக்காங்க.

இதுக்கு நடுல பாலஸ்தீன விட்டு பல நாடுகளுக்கு சென்ற யூதர்கள் அமெரிக்கா, ஐரோப்பானு போன இடங்கள்ல எல்லாம் அதிகாரவர்க்கமா மாறி தலைமை பொறுப்புகள தன்வசப்படுத்தி வச்சிருக்காங்க. பணமும் நிறைய சம்பாதிச்சு சேர்த்து வச்சிருக்காங்க. 18 ஆம் நூற்றாண்டு இறுதில ஹங்கேரியால வழக்கறிஞரா இருக்க யூத குடும்பத்த சேர்ந்த தியோடர் எர்ட்செல், யூதர்களுக்கு நடக்குற பல அநீதிகள பாக்குறாரு. பல பாதிக்கப்பட்ட யூதர்களுக்கு வழக்கறிஞரா இருந்து வழக்க நடத்தி கொடுக்குறாரு.

யூதர்களுக்கு எதிரா நடக்குற பல அநீதிகள பாத்து ஒரு விஷயத்த புரிஞ்சுக்குறாரு. யூதர்கள் சொந்த நிலத்துல மட்டிமில்லாம, போற இடங்கள்ல எல்லாம் கஷ்டப்படுறாங்க. மத்த நாடுகள்ல 2ஆம் தர குடிமக்களா நடத்தப்படுறாங்க. யூதர்களுக்குனு தனி நாடு வேணும்னு முடிவு பண்றாரு. World Zionist Organisation-னு ஒரு அமைப்ப உருவாக்குறாரு. உலகம் முழுக்க இருக்கக் கூடிய யூதர்கள ஒன்னாக்குறாரு. பல நாடுகள்ல இருக்க யூதர்கள் எல்லாரும் ஒன்னு கூடி நமக்கு ஒரு இடம் வேணும், அத உருவாக்கனும்னு முடிவெடுத்து அவங்க புனித தலம் இருக்க கூடிய ஜெருசலேம்-க்கு வராங்க. சும்மா வரல… யூதர்கள் எல்லாரும் அவங்க சேத்துவச்ச பெரும் செல்வத்த எடுத்துட்டு வராங்க.

தொடர்ந்து பாலஸ்தீன்ல யூதர்களோட எண்ணிக்கை ரொம்ப அதிகமாகுது. அங்க இருக்கக் கூடிய அரேபியர்கள் கிட்ட இருந்து தங்களோட செல்வத்த வச்சு நிலங்கள வாங்க ஆரம்பிக்குறாங்க யூதர்கள். கொஞ்சம் கொஞ்சமா தங்களோட எல்லைய விரிவாக்கி பாலஸ்தீனத்தோட பெரும்பகுதிய ஆக்கிரமிக்குறாங்க. முதலாம் உலகப் போருக்கு முன்னாடி வரை பாலஸ்தீன் ஒட்டோமான் பேரரசுக்கு கீழ இருந்துச்சு. 19ஆம் நூற்றாண்டுல முதலாம் உலகப் போர்ல ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியடைஞ்சு அது பிரிட்டன் ஆட்சிக்கு கீழ வருது. அந்த சமயத்துல யூதர்கள் நிறைய பேர் கொல்லப்பட்டாங்க. முதல் உலகப்போர் முடிவுல ஹிட்லரால மில்லியன் கணக்கான யூத மக்கள் கொல்லப்பட்டாங்க.

அப்ப லட்சக்கணக்கான யூதர்கள் பாலஸ்தீன நோக்கி படையெடுத்து வந்து தங்குறாங்க. யூதர்கள் எல்லை இன்னும் பெருசாகுது. யூதர்களோட ஒற்றுமையால அவங்களோட பணபலம், ஆதிக்க பலம் ரெண்டும் அதிகமாகுது. யூதர்கள் தங்களோட அமைப்ப வலுவாக்கி, ஆட்சி அதிகாரத்துல இருக்க கூடிய பிரிட்டன் கிட்ட பேசி பாலஸ்தீன இரண்டா பிரிக்கனும், எங்களுக்கு இஸ்ரேல் நாட்ட உருவாக்கி தரனும்னு கேக்குறாங்க. பிரிட்டனும் அதுக்கு ஒத்துக்கிட்டு அங்க இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி பாலஸ்தீன இரண்டா பிரிச்சு, யூதர்கள் இருக்கக் கூடிய பகுதிய இஸ்ரேல் நாடா அறிவிச்சு விடுதலையும் கொடுத்துட்டு கிளம்புறாங்க.

பல அரபு நாடுகள் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சும், பாலஸ்தீன் பிரியுறத இஸ்ரேல் நாடு உருவானத தடுக்க முடில. அதுக்கு பிறகு இஸ்ரேல் இன்னும் இன்னும் பாலஸ்தீன்ல தன்னுடைய ஆக்கிரமிப்ப அதிகப்படுத்த பாத்துட்டே இருக்கு. அது பாலஸ்தீன் மக்களுக்கு பிடிக்கல. அரபு நாடுகளுக்கும் பிடிக்கல. 1948-ல ஆரம்பிச்சு இன்னைக்கு வரை இந்த பிரச்னையால தான் சண்டை தொடருது. இன்னும் தொடர்ந்துட்டு தான் இருக்கு.

2 நாட்டுக்கு நடுல இருக்க பிரச்னைல பல்லாயிரக்கணக்கான பாமர மக்கள், பெண்கள், குழந்தைகளோட உயிர் போய்கிட்டே இருக்கு. இஸ்ரேலா, பாலஸ்தீனா… இஸ்ரேலுக்கு யார் ஆதரவு? பாலஸ்தீனுக்கு யார் ஆதரவு? யூதர்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள்… யார் பக்கம் நியாயம் இருக்கு? இப்படி பல கேள்விகள் இருந்தாலும் இதையெல்லாம் விட முக்கியமானது மனித நேயம் தான்.

எந்த ஒரு விஷயத்துக்கும் என்னைக்கும் போர் ஒரு தீர்வாகாது. அதும் பாமர மக்கள் மேல நடத்தப்படுற போர் ரொம்ப மோசமான ஒன்னு. ஆனா மனித குலம் போரை விரும்பக்கூடியதா தான் அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் இருக்கு. இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒவ்வொரு நாடும் ஒரு பக்கம் பேசாம உலகநாடுகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்த நடத்தி அதுக்கான தீர்வு காணனும் அப்படிங்குறது தான் சாதாரண குடிமக்களுடைய விருப்பமும்.

Article By MaNo