Specials Stories

நம்ம கண்ணுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கா?

அதிகமா மொபைல் கம்ப்யூட்டர் Use பண்ணா கண்ணு பாதிக்கும்னு சொல்றாங்க. ஆனா சில பேருக்கு இல்ல, பல பேருக்கு கம்ப்யூட்டர் மொபைல் இதுல தான வாழ்க்க பொழப்பே ஓடிட்டு இருக்கு. அப்டி இருக்கும் போது நம்ம கண்களை எப்படி பராமரிக்கறது? இதனால நம்ம கண்ணுல ஏற்படும் சில மாற்றங்கள் பத்தி தான் இந்த வீடியோல பாக்க போறோம்.

நம்ம எல்லாருமே கண்ணு துடிக்கறத பீல் பண்ணி இருப்போம். வலது கண்ணு துடிச்சா நல்லது, இடது கண்ணு துடிச்சா கெட்டதுனு விட்டுடுவோம், ஆனா நாம ரொம்ப டென்ஷனா இருக்கப்ப, எதையோ பத்தி அதிகமா யோசிச்சி Stress-ஆ இருக்கப்ப தான் கண்ணு துடிக்குமாம்.

ரொம்ப Pressure ஏறி மண்ட காயுதுனு சொல்லுவாங்கல்ல… அதே மாதிரி ரொம்ப Pressure ஏறி கண்ணும் காயுமாம். அதாவது கண்ணுல Pressure ஏறி கண்ணு Dry ஆகுமாம். அந்த சமயத்துல தண்ணி நிறைய குடிங்க, 20 நொடி கண்ண மூடி ரிலாக்ஸ் பண்ணுங்க, முடிஞ்சா Cucumber இல்ல Cotton Pad-அ தண்ணில நனச்சு கண்ணுல வச்சு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.

Diabetes இருக்கும் போது கண்ணு கொஞ்சம் மங்கலா தெரியுனு சொல்லுவாங்க. அப்டி உங்களுக்கு மங்கலா தெரியுற மாதிரி Feel ஆச்சுன்னா Diabetes செக் பண்றது நல்லது. கண்ணுக்குள்ள எல்லாம் Normal-ஆ தான் இருக்கும். ஆனா கண்ணுக்கு வெளிய கண்ணுக்கு கீழ மாதிரி வீங்கி இருக்கும். இதுக்கு முக்கிய காரணம் சரியா தூங்காதது தான். ஒரு சராசரி மனிதனுக்கு ஏழுல இருந்து எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.

நம்ம கண்ணுல இருக்க White Part-ல Yellow Growth இருந்தா நீங்க வெயில்ல ரொம்ப நேரம் இருக்கிங்க. சூரிய ஒளி அதிகமா உங்க கண்ணுல படுதுனு அர்த்தம். அதனால வெளிய போகும் போது Sun Glasses Use பண்ண மறக்காதிங்க. நீங்க ஒரு அழகான Nature View-ல பாக்கும் போது சின்னதா கோடு கோடா தெரிஞ்சுதுனா அத Eye Floaters-னு சொல்லுவாங்க. இப்டி இருக்கவங்க உடனே டாக்டர பாக்குறது நல்லது.

இத தாண்டி கண்ண பொறுத்தவரை ஏகப்பட்டது இருக்கு. உங்களுக்கு ஏதாவது Uncomfortable Feel இருந்தா உடனே டாக்டர பாத்து அதுக்கான சிகிச்சை பண்றது நல்லது. நம்மளோட கண்களுக்காக நாம கண்டிப்பா Follow பண்ண வேண்டிய 7 விஷயங்கள் இருக்கு.

  1. YEARLY ONCE REGULAR EYE CHECKUP
  2. SHOULD AVOID SMOKING & ALCOHOL
  3. 30 TO 40 MINS EXERCISE DAILY
  4. SYSTEM & MOBILE அதிகம் USE பண்றவங்களா இருந்தா ’20-20-20 RULE’ FOLLOW பண்ணுங்க. அதாவது 20 MINS க்கு ஒருமுறை SCREEN பாக்குறதுல இருந்து BREAK எடுத்து 20 அடி தூரத்துல இருக்க ஒரு பொருள 20 SECS பாக்கனும்.
  5. SUNGLASSES இல்லாம வெளிய எங்கயாவது போகனும்னு நினைச்சு கூட பாக்காதிங்க. அதே மாதிரி COMPUTER USE பண்ணுறப்ப SYSTEM GLASS USE பண்ணுங்க.
  6. நல்ல FRUITS, VEGETABLES, FISH, EGG-னு நிறைய எடுத்துக்கோங்க. இதெல்லாம் கண்ணுக்கு ரொம்ப நல்லது.
  7. LAST… SELF MEDICATION எடுக்குறத AVOID பண்ணுங்க. கண்ணு எரிச்சல் வந்தாலோ இல்ல ஏதாவது ஒரு பிரச்னை இருந்தாலோ MEDICAL SHOP-ல DROPS வாங்கி USE பண்றத நிறுத்துங்க.

மனிதனுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட அழகான திறன் இந்த பார்வை திறன். சுத்தி எத்தனையோ பேர் பார்வை திறன் இல்லாம இருக்காங்க, அப்டி இருக்கும் போது நமக்கு கெடச்ச இந்த பார்வை திறன இந்த கண்கள பத்திரமா பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு.

Article By ILAKIYA.S