Cinema News Specials Stories

பத்து தல படம் பாக்குறதுக்கு முன்னாடி இத படிங்க!

‘பத்து தல’ கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிச்ச Mufti படத்தோட தமிழ் ரீமேக் தான் பத்து தல. படம் கன்னடத்துல வேற லெவல் ஹிட். அதுல சிவராஜ்குமார் நடிச்ச கேரக்டர்ல தான் தமிழ்ல STR நடிச்சிருக்கார். கதாநாயகன், நாயகியா கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிச்சிருக்காங்க. இதுக்கு மேல ஸ்பாய்லர் அலர்ட் குடுத்துட்டு கதைக்குள்ள போவோம்.

ஹீரோ கெளதம் கார்த்திக் பார்வைல இருந்து தான் கதை முழுக்க நகரும். கதைல மிகப்பெரிய மணல் மாஃபியா King-ஆ வராரு நம்ம பத்து தல ராவணன் சிம்பு. கெளதம் கார்த்திக் மப்டில வர ஒரு COP. வழக்கமான Undercover Operation மாதிடியே இவரும் அடியாள் வேசத்துல சிம்புவ பிடிக்க வர்றாரு. இன்னொரு பக்கம் கொஞ்சம் அரசியல், எலெக்‌ஷன்னு ஒரு பக்கம் கதை நகருது. இதுக்கு நடுல கெளதம் கார்த்திக் தன்னோட வேலைகள பண்ண ஆரம்பிக்குறாரு.

எப்டி AGR Gang-ல இவரு போய் சேருறாரு, என்னென்ன பிரச்னைகள இவரு சமாளிக்குறாருனு இவரு கதையும் நகரும். படத்தோட இண்டர்வெல் கிட்ட தான் AGR Entry இருக்கும். அதுக்கப்புறமா சிம்பு யாருனு கொஞ்சம் கொஞ்சமா கெளதம் கார்த்திக் தெரிஞ்சுக்க ஆரம்பிப்பாரு. ரொம்ப பயங்கரமான வில்லன் நெருங்க நெருங்க வேற மாதிரி தெரியுறாரு. நாயகன் பட வசனம் மாதிரி சிம்பு நல்லவரா கெட்டவரானு கெளதம் கார்த்திக் குழம்பிடுவாரு.

அதுக்கப்புறம் அவங்க 2 பேருக்குள்ள நடக்குற விஷயங்கள், அரசியல் கதை என்னாகுதுனு ரொம்ப சுவாரஸ்யமா கதை நகரும். க்ளைமேக்ஸும் ரொம்ப சூப்பரான ஒரு க்ளைமேக்ஸ். கெளதம் கார்த்திக், சிம்பு 2 பேருக்கும் இந்த படம் நல்ல பேர வாங்கித்தரும்.

இன்னொரு முக்கியமான விஷயம் மப்டி படத்துல இருந்து Inspire ஆகி நிறைய சீன்ஸ் KGF Part 1 ல வச்சிருக்காங்க. அப்பறம் விக்ரம் படத்துல கமல் எண்ட்ரிக்காக Fans எப்டி காத்திருந்தாங்களோ அதே மாதிரி பத்துதல படத்துல STR Entry க்காக Fans காத்திருப்பாங்க.

கமல் Entry அப்போ தியேட்டர்ல ஆடியன்ஸ் முழுக்க எப்டி கொண்டாடினாங்களோ அதே போல பத்து தல படத்துல STR Entry அப்போ தியேட்டர் முழுக்க அதிரும். அதுவுமில்லாம காலா ரஜினி காஸ்ட்யூம்ல கருப்பு வேட்டி சட்டைல தாடி வச்சு ஒரு பயங்கரமான கேங்ஸ்டரா கண்முன்னாடி ராவணன கொண்டு வந்து நிறுத்துறாரு STR.

இப்டி தமிழ்ல ரீமேக் ஆகுற படம்னு சொன்னாலும்… தமிழ்ல ட்ரெய்லர் பாக்குறப்ப வேற லெவல்ல இருக்கு. “இங்க எவன் ஆளனும் எவன் வாழனும்னு நான் தான்டா முடிவு பண்ணனும்… மான ஓநாய் கொல்லும், ஓநாய சிறுத்தை கொல்லும், சிறுத்தைய புலி கொல்லும், புலிய சிங்கம் கொல்லும், ஆனா அந்த சிங்கத்த கொல்றதுக்கு இன்னொரு மிருகம் பொறந்து வரலடா, துரோகமும் துரோகியும் AGR-க்கு புதுசா என்ன?” இப்டி ட்ரெய்லர்ல சிம்பு பேசுற ஒவ்வொரு வசனமும் Goosbumps-ஆ இருக்கு.

இன்னொரு முக்கியமான விஷயம் AR Rahman. சிம்பு ARR Combo எப்பவும் Success தான். இது படத்துக்கு கூடுதல் ப்ளஸ். இதுக்கு நடுல சயிஷா வேற ராவடி பாட்டுக்கு வேற லெவல்ல பர்பாமன்ஸ் பண்ணியிருக்காங்க. அந்த பாட்டு ரிலீஸ் ஆனதுல இருந்து யூட்யூப்ல Repeat Mode-ல பலரும் பாத்துட்டு இருக்காங்க.

அது மட்டுமா நம்ம சத்தம், ஒசரட்டும் பத்து தல பாட்டும் Mass-ஆ இருக்கு. ட்ரெய்லர்ல வர தீம் மியூசிக், BGM எல்லாமே ரொம்ப நல்லாருக்கு.. கெளதம் கார்த்திக் Career-ல ரொம்ப நாளைக்கப்புறம் மக்களால பெரிய அளவுல கொண்டாடப்படக் கூடிய படமாவும், கதாபாத்திரமாவும் நிச்சயம் இது இருக்கும்.

மாநாடு, வெந்து தணிந்தது காடுனு தொடர்ந்து வெற்றி வழில பயணிச்சுட்டு இருக்க சிம்புவோட அடுத்த மிகப்பெரிய வெற்றியா பத்து தல படம் இருக்கும்னு அப்டினு தோண வச்சிருக்கு இதுவரை வந்த அப்டேட்ஸ். ட்ரெய்லரும் அந்த எதிர்பார்ப்புகள பூர்த்தி செய்ற மாதிரி துப்பாக்கி தோட்டாக்கள் தெறிக்க வெறித்தனமா இருக்கு.

சென்சார்ல சில கெட்ட வார்த்தைகளையும், கொடூரமான ரத்தக் காட்சிகளையும் நீக்கி யு/ஏ சர்ட்டிபிகேட் கொடுத்துருக்காங்க. படத்த பாத்துட்டு எப்டி இருக்குனு உங்க கருத்துக்கள சொல்லுங்க.

Article By MaNo