Specials Stories

நெஞ்சில் கலந்த ராகமே !! S.P.B

ரொம்பவே வேலை..கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் நேரம் .. என்ன செய்ய… சரி…. ஒரு கோப்பை தேனீர்..??!அது போதுமா… !!!😐இல்லை… இல்லவே இல்லை….”என் உடலில் சோர்வில்லை.. உள்ளத்தில் தான் புத்துணர்ச்சி தட்டுப்பாடு … ( பெருமூச்சு விட்ட அந்த கணம்)காற்றில் மிதந்து வந்த அந்த பாடல்…(கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட… கமரிக…. )


ஐன்னல் ஓர இருக்கையும் இல்லை.. சில்லென்று வீசும் காற்றின் வருடலும் இல்லை… ஒரு மூடப்படாத, குளிரூட்டப்படாத அறை… அக்கம் பக்கம் ஆயிரம் உரையாடல்… அத்தனையும் தாண்டி என் மனம் தேடிய அந்த புத்துணர்ச்சி என் செவி வழியாக மனம் நிறைய ஆரம்பித்தது.
பாடல் என்றால் என்ன.. இசையோடு கலந்த கவிதை / உரையாடல் / புலம்பல் / பேச்சு அது தானே….!!! இல்லை இல்லை…. குரல்.. அது இனிமை கலந்த குரல்தான்.. என்று என் மூளை எனக்கு தகவல் சொல்ல… சற்றே புன்னகையுடன்…என் புத்துணர்வு தேடல்… அடுத்த பாடல் (ஜெர்மனியின் பொன் தேன் மலரே..)அந்த குரல் … அப்பபா…ரசிக்க ஆரம்பித்து சுற்றி உள்ள அத்தனையும் மறந்தது மட்டுமின்றி… எனக்குள்ள வேலையும் மறந்தேன். பாடலில் வரும் வரிகள் போலவே 😅( காதல் தேவை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் ) ..


 அடுத்த பாடல் ஆரம்பிக்கும் முன்… மனம் உற்சாகத்தின் உச்சியில் இருக்க.. அடுத்த பாடல் ( உன்னை பார்த்த பின்பு நான்….) அடடடா…காதல் வாடை காணாத நானும் நொடியில்..ஒரு தலைக் காதலர் ஆனேன்…. மயக்கும் இசை ஒரு பக்கம் இருந்தாலும்.. என்னை சிறைபிடித்த அந்த குரல்… அந்த பாடலில் மயங்கிய….நான்.🤤நானாக இல்லாத போது….என்னவென்று சொல்வதம்மா.. என்ற அடுத்த பாடல்…. நிச்சயம் சொல்ல வார்த்தைகள் பஞ்சம் தான்….ரசித்த என் மனம் நிறைந்த நேரம்…..

என் கடமை உணர்த்த அடுத்த பாடல்… என்ன தெரியுமா. .??! ஒருவன் ஒருவன் முதலாளி….. நாற்காலியில் அமர்ந்திருந்த நானும்.. நடனம் ஆடி கடமைக்குள் சென்றேன்……??!இது என் அன்றாட வாழ்க்கையில் நித்த விருந்தாளி…. என் மனம் நிறையும் வெறுமை… அதை உபசரித்து அனுப்பும் என் எந்நேர துணை…. அந்தக்குரல்…🤗🤗அத்தனை பாடல் ஒவ்வொன்றும் முத்துப்போல்… அவர் சாதனை எத்தனை எத்தனையோ….!!


ஆனால் முகம், முகவரி தெரியாத என்போன்ற எண்ணற்ற உள்ளங்களுக்கும் தினமும் நிறைவு தரும் அந்த பெருமை அவருக்கு மட்டுமே சொந்தம்… நெஞ்சின் நீங்கா துணையாளர்…..என்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.உருவம் காணாத போது… விவரம் தெரியாத போது எனக்குள் நிறைந்த அந்தக்குரல்..இன்னும் நீங்க வில்லை… என்றும் விலகுவதும் இல்லை…..

( நெஞ்சில் கலந்த ராகமே…என்றும் உன்னை ரசித்திருப்பேன்…😍என் போன்ற அத்தனை காந்தக்குரலின் காதலர்கள் சார்பாக இந்த பதிவு….. ❣️)கல்லையும் காதலிக்க வைப்பார்..கனிவற்றவருக்கும் கருணை சுரக்க வைப்பார்… அவர் அவர் மட்டும் தான்…என்னைக் கவர்ந்த காந்தக்குரலின் சக்ரவர்த்திக்கு தங்களை மனதோடு சுமப்பவரின் பிறந்தநாள் வாழ்த்து.

Article by RJ Ramya