Cinema News Specials Stories

Internet sensation ‘SAMANTHA’

Samantha

Internet sensation, Queen of cute pictures, Beauty with brain, Owner of hash and hashtags யாருன்னு கேட்டா Sam-னு சொல்லலாம்.

2010-ல, தெலுங்கு சினிமா மூலமா கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் அறிமுகமான நடிகை சமந்தா ருத் பிரபு. இந்த படத்துக்கு Film fare award மற்றும் Nandi award கிடைச்சது ஒரு நல்ல அங்கீகாரம்னு சொல்லலாம்.

இப்போ Cute actress சமந்தாவிலிருந்து Hot actress சமந்தவா மாறி வலம் வந்துட்டு இருக்காங்க. காத்துவாக்குல 2 காதல், சகுந்தலம், யசோதா மற்றும் சிட்டாடல் போன்ற சினிமா மற்றும் வெப்சீரிஸ் அடுத்தடுத்து ரிலீஸ் டேட் & அப்டேட்ஸ் வச்சிருக்கிற சமந்தா, சமீபத்துல புஷ்பா படத்தில் ‘ ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ பாட்டுக்கு ஆடி ஓஹோன்னு ரீச் ஆயிருக்காங்க.

இன்டர்நெட் சென்சேஷன் ஆனதுக்கு முதல் காரணம் மூத்த காரணம் அவங்களோட விவாகரத்து தான். சமீபமா மஜ்னு படம் ரிலீசாகி 3 வருஷம் ஆனதால அந்தப் படத்தோட போஸ்டர தன்னோட இன்ஸ்டாகிரம் பக்கத்துல ஷேர் பண்ணவும், என்னவா இருக்கும் ஏதா இருக்கும்னு பேசுற அளவுக்கு இன்டர்நெட் சென்சேஷனா இருக்காங்க.

விவாகரத்துக்கு அப்புறமா இறந்து போய்டுவோமோனு யோசிச்ச சமந்தாவே, விவாகரத்துக்கு அப்புறமா தான் நான் மனரீதியா எவ்வளோ ஸ்டிராங் அப்படீன்றத உணர்ந்தேனு சொல்லியிருக்காங்க. சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோ, செல்லப்பிராணிகளோட இருக்கும் வீடியோ, அவங்களோட புதிய புகைப்படங்கள் எல்லாமே ஆல்வேஸ் ட்ரெண்டிங் தாங்க.

நமக்கு தெரிஞ்ச க்யூட், சென்சேஷனல், ஹாட், யங் சமந்தாவுக்கு 35 வயசாகுது. யசோதாவாகிய, க்யூட் சமந்தாவுக்கு சூரியன் எப்.எம்-இன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Article By RJ Prabhu