Specials Stories

ஹீரோக்களின் Favorite அம்மா – சரண்யா !!!

ஆழப்புழாவில் ஷீலா கிறிஸ்டினா எனும் பெயரில் பிறந்து நாயகன் படத்தில் 1987-ல், நடித்தவர் தான் சரண்யா பொன்வண்ணன். 1988-ல நிரஞ்சனம் எனும் தெலுங்கு படத்திலும், 1989-ல் அர்த்தம் எனும் மலையாள படத்திலும், 1996-ல் அப்பாஜி எனும் கன்னடா படத்திலும் தன்னுடைய கால் தடத்தை முதன் முதலில் பதித்தார்.

தன்னுடைய திருமணத்திற்கு பிறகு ஒரு பெரிய இடைவெளி எடுத்தார். 75 படங்கள் எடுத்த மலையாள பட இயக்குனரின் மகளாக கேரளாவில் பிறந்து சரண்யா பொன்வண்ணன் ஈரோட்டில் பிறந்த இயக்குனரும் நடிகருமான பொன்வண்ணன் அவர்களை திருமணம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து கோலிவுட்டின் சிறந்த துணை நடிகையாக சரண்யா வலம் வருகிறார்.

Saranya Ponvannan - Wikipedia

ராம், தவமாய் தவமிருந்து, எம் மகன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் சரண்யாவின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தது. அந்த படங்களில் கதாநாயகனின் உண்மையான தாயை போன்றே நடித்திருப்பார். தன்னுடைய இயல்பான நடிப்பு மூலம் அனைத்து கதாநாயகர்களின் மனம் கவர்ந்த தாயாக சரண்யா மாறிவிட்டார்.

தென்மேற்கு பருவ காற்று படத்தில் ‘வீராயி’ எனும் கதாபாத்திரம் தான் அவருடைய நூறாவது திரைப்படம். அந்த கதாபாத்திரத்திற்க்காக சரண்யா தேசிய விருது பெற்றார். அதுமட்டுமின்றி தனது தத்ரூபமான நடிப்பினால் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

சரண்யாவின் நடிப்பு தமிழ் சினிமாவில் என்றும் மேலோங்கி இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மேலும் பல படங்களில் சரண்யா நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டி, சூரியன் FM சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article by RJ Anand Prabhu