Cinema News Specials Stories

சமந்தாவ முயல் கடிச்சிருச்சா?

என்னது சாகுந்தலம் சூட்டிங்ல சமந்தாவ முயல் கடிச்சிருச்சா? பூ மேல பட்டதால 6 மாசம் அலர்ஜி ஆகிடுச்சா? இன்னும் என்னென்னலாம் நடந்துச்சு… சாகுந்தலம் படத்தோட கதை தெரியுமா? வாங்க இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள பத்தி இந்த வீடியோல பாப்போம்.

இந்தியால கடந்த சில வருசமா நிறைய புராண கதைகள், சாமி கதைகள் படங்களா உருவாகிட்டு இருக்கு. ஒரு பக்கம் ஹனுமான், ஆதிபுருஷ் மாதிரியான படங்கள் வருது, அதே சமயம் கமர்ஷியல் சினிமாக்களும் நிறைய அப்டி வர ஆரம்பிச்சிருக்கு… பிரம்மாஸ்திரா, ராம் சேது மாதிரி. அதே சமயம் தமிழ்ல பொன்னியின் செல்வன், யாத்திசைனு தென்னிந்திய மன்னர்களுடைய வரலாற்று புனைவுகள் படங்களா உருவாகிட்டு இருக்கு.

அதுமட்டுமில்லாம அயோத்தி-ன்ற பேர்ல மக்களுக்கான படங்களும் வந்துட்டு இருக்கு. இந்த வரிசைல இப்ப நாம பாக்க போற படம் சாகுந்தலம். மகாபாரத புத்தகத்தோட ஆதி பருவத்துல இடம் பெற்றிருக்க புராண கதை தான் சகுந்தலையோட கதை. தமிழ்ல 1940-லயே சகுந்தலையோட கதை எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்புல சகுந்தலை-ன்ற பேர்லயே படமாகியிருக்கு.

இப்ப 2023-ல சகுந்தலை கதை சாகுந்தலம்-ன்ற பேர்ல படமாகியிருக்கு. சகுந்தலை கதாபாத்திரத்துல சமந்தா நடிச்சிருக்காங்க. முதல்ல சகுந்தலை யாரு? அவங்களுடைய கதை என்னனு தெரிஞ்சுப்போம். முனிவர் விசுவாமித்திரர் பிரம்ம ரிஷி அந்தஸ்தை பெறனும்னு கடுமையான தவம் பண்ணிட்டு இருந்துருக்காரு. அத பாத்து பயந்து போன இந்திரன் தேவலோகத்துல இருந்து தேவ மங்கை மேனகைய முனிவரோட தவத்த கலைக்க அனுப்புறாரு.

மேனகை வந்து விசுவாமித்திரர் முன்னாடி டான்ஸ் ஆடி மயக்குறாங்க. முனிவரோட தவம் கலைஞ்சு போயிடுது. அவர் மேனகைய கல்யாணம் பண்ணிக்குறாரு. அவங்களுக்கு பிறந்த பொண்ணு தான் சகுந்தலை. அதுக்கு பிறகு என்னோட தவம் கலைய மேனகை தான் காரணும்னு அவங்கள சபிச்சுட்டு குழந்தையையும் விட்டுட்டு மறுபடியும் தவம் பண்ண கிளம்பிடுறாரு விசுவாமித்திரர்.

மேனகைக்கு திரும்ப தேவ லோகத்துக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுது, அங்க குழந்தைய கொண்டு போக வாய்ப்பில்ல, இந்த சூழல்ல என்ன பண்றதுனு தெரியாம குழந்தைய காட்டுல விட்டுட்டு போயிடுறாங்க. பறவைகள் எல்லாம் சேர்ந்து அந்த குழந்தைய பாத்துக்குதுங்க. கன்வ முனிவர் அந்த பக்கம் வரப்போ குழந்தைய பாக்குறாரு. பறவைங்க பாதுகாப்புல இருந்த அந்த குழந்தைக்கு சகுந்தலைனு பேரும் வச்சு, ஆசிரமத்துக்கம் கொண்டு போய் வளக்குறாரு.

இப்ப சகுந்தலையோட கதை. சகுந்தலை ஆசிரமத்துல வளர்ந்துட்டு பெரிய பெண் ஆகிடுறா. காட்டுல இருக்க பறவைகள், விலங்குகள் எல்லாத்தையும் அன்பா பாத்துக்குறா. இப்போ வேட்டையாடுறதுக்காக மன்னர் துஷ்யந்தன் அந்த பக்கம் வந்திருக்காரு. ஒரு மான பாக்குறாரு, அது மேல அம்ப விடுறாரு. மான் காயத்தோட தப்பி ஓடுது, அத தேடிட்டு இவரும் போறாரு. அந்த மான கண்டுபிடிக்குறாரு.

அந்த மானோட காயத்துக்கு ஒரு பொண்ணு மருந்து போட்டுட்டு இருக்காங்க. அவங்க தான் சகுந்தலை. ரெண்டு பேரும் சந்திக்குறாங்க. காதல் மலருது. மான் மேல அம்பு விட்டதுக்கு மன்னிப்பு கேக்குறாரு. ரெண்டு பேரும் காதல் திருமணம் பண்ணிக்குறாங்க. சகுந்தலை வயித்துல குழந்தையும் உருவாகுது. அவர் நாட்டுக்கு திரும்புற நேரம் வருது. சீக்கிரமே திரும்பி வரேனு சொல்லிட்டு சகுந்தலைட்ட ஒரு அரச மோதிரத்த கொடுத்துட்டு போறாரு.

இதுக்கு பிறகு சகுந்தலா அவரோட காதல் கணவன் துஷ்யந்தன் நியாபகத்துலயே இருக்காங்க. ஒரு நாள் அவங்க ஆசிரமத்துக்கு ரொம்ப சக்திவாய்ந்த முனிவர் துர்வாசர் வராரு. துஷ்யந்தன் நியாபகத்துலயே இருக்க சகுந்தலை அவர கண்டுக்காம சரியா வரவேற்காம விட்டுடுறாங்க. இதனால கோவமான முனிவர் துர்வாசர் நீ யார நினைச்சுட்டு இப்டி இருக்கியோ அவங்க உன்ன மறந்துடுவாங்க சாபம் உட்றாரு.

அதுக்கு பின்னாடி என்ன நடக்குது, துஷ்யந்தன் சகுந்தலைய மறந்துட்டானா? திரும்பி வந்தானா? சகுந்தலையோட குழந்தை என்னாகுது? அப்டிங்குறது தான் கதை. படத்தோட ட்ரெய்லரும் ரொம்ப நல்லாருந்துச்சு. இந்த படத்தோட சூட்டிங்ல சமந்தா ரொம்பவும் கஷ்டப்பட்டுருக்காங்க. சூட்டிங் சமயத்துல ஏதோ ஒரு முயல் சமந்தாவ கடிச்சிருக்கு. அதுமட்டுமில்ல ஏதோ ஒரு பூ பட்டதால கிட்டத்தட்ட 6 மாசம் தோல் பிரச்னை உண்டாகிருக்கு.

அவங்களுக்கு ஏற்கனவே தோல் பிரச்னை இருந்துருக்குறதால ரொம்ப கஷ்டப்பட்டுருக்காங்க. அதுமட்டுமில்லாம ஏதோ ஒரு பாட்டுக்காக அதிக எடை கொண்ட ட்ரெஸ் போட்டு டான்ஸ் ஆடியிருக்காங்க. இவங்க ஒரு பக்கம் போக ட்ரெஸ் ஒரு பக்கம் போயிருக்கு. அப்பறம் ரொம்ப கஷ்டப்பட்டு எப்படியோ ஆடி முடிச்சிருக்காங்க. நம்ம ஊர்ல இருக்க பிரச்னை என்னன்னா அனிமேஷன் தொழில்நுட்பம் பெருசா வளரல.

குறிப்பிட்ட சில இயக்குநர்கள் தான் அனிமேஷன் தொழில்நுட்பத்த நல்லா யூஸ் பண்றாங்க. ராஜமெளலி, சங்கர் மாதிரி. சாகுந்தலை படத்துல மிருகங்கள் வர அனிமேஷன் ரொம்ப மோசமா இருக்கு. அவதார் படங்கள் வெளியாகுற காலத்துல, உலகம் முழுக்க அனிமேஷன் படங்கள் அற்புதமா வந்துட்டு இருக்க சமயத்துல நம்ம நாட்ல அனிமேஷன் இன்னமும் கடமைக்குனு கையாளப்பட்டு வந்துட்டு இருக்கு.

சமீபத்துல ஆதிபுருஷ் படத்தோட ட்ரெய்லர் வெளியானப்ப அதோட அனிமேஷன் காட்சிகள சோசியல் மீடியால பலரும் கடுமையா விமர்சிச்சிருந்தாங்க, கலாய்ச்சிருந்தாங்க. நிறைய கார்ட்டூன் சேனல்கள் அளவுக்கு கூட இந்திய சினிமால அனிமேஷன் தொழில்நுட்பம் கையாளப்படல அப்டிங்குறது தான் இங்க உண்மை. இத ஏன் இப்ப சொல்றோம்னா சாகுந்தலம் படம், கதை, கதாபாத்திரங்கள் எல்லாம் நல்லா இருந்தாலும் அனிமேஷன் சரியில்ல.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தினு 5 மொழில படம் வந்துருக்கு. தமிழ், தெலுங்கு , இந்தினு 3 Language-ல சமந்தாவே டப்பிங் பேசியிருக்காங்க. ‘ஒக்கடு’, ‘ருத்ரமாதேவி’ இன்னும் பல தெலுங்கு படங்கள இயக்கிய குணசேகர் தான் இந்த படத்தையும் இயக்கியிருக்காரு. இந்த படத்த பத்தி நீங்க என்ன நினைக்குறிங்கனு கமெண்ட்ல சொல்லுங்க.

Article By MaNo