Specials Stories

சாகுற நாள் தெரிஞ்சுட்டா என்ன பண்ணுவிங்க… அப்படிப்பட்ட நிலைல இவர் என்ன பண்ணாரு தெரியுமா?

சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகமாகிடும்னு சொல்வாங்க. அது உண்மையா பொய்யானு நமக்கு தெரியாது. அனுபவிச்சா தான் தெரியும். அப்படி சாகுற நாள தெரிஞ்சுகிட்டு தன்னோட வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு செத்து போன ஒருத்தர பத்தி தான் இப்ப நாம பாக்க போறோம்.

தெலங்கானாவ சேர்ந்த 34 வயசு டாக்டர் ஹர்ஷவர்தன், எம்பிபிஎஸ் முடிச்சுட்டு ஆஸ்திரேலியால Doctor-ஆ வேலை பார்த்துட்டு இருந்தாரு. 2020-ல இவருக்கு கல்யாணம் ஆகியிருக்கு. கல்யாணத்துக்கு பின்னாடி கொஞ்ச நாள் கழிச்சு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்குது. இவரு Excercise பண்ணிட்டு இருக்கும் போது Vomit வருது. Vomit பண்ணா ரத்தமா இருந்துருக்கு. பதறி போய் என்னனு Check பண்ணா அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்குனு தெரிய வருது.

அவரே ஒரு டாக்டர் தான. Cancer எவ்வளவு கொடூரமான நோய்னு தெரியும். Cancer-க்கு இதுவரைக்கும் நிரந்தர தீர்வுனு ஒன்னு கண்டுபிடிக்க முடியல. வேற ஏதாவது உடல்பாகத்துல Cancer வந்தா வெட்டி கூட எடுத்துட்டு வாழலாம். ஆனா நுரையீரல்ல Cancer-னா Treat பண்ணவே முடியாது. இன்னும் 2 வருசத்துல நாம சாகப்போறோம்னு அவரு தெரிஞ்சுக்கிட்டாரு.

சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகமாயிடும்னு ஆரம்பத்துல சொன்னது மாதிரி மனசு உடைஞ்சு நொந்து போய் இருக்கல. அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்குறாரு. நமக்கு இன்னும் 2 வருசம் தான் Time இருக்கு என்னென்ன பண்ணனும்னு Plan பண்றாரு. மனைவியோட எதிர்காலத்த பத்தி யோசிக்குறாரு. அவங்ககிட்ட உக்காந்து பேசி Divorce பண்ண சொல்றாரு. அவங்க முதல்ல ஒத்துக்கல. தொடர்ந்து பேசி அவங்கள தயார் பண்ணி Divorce கொடுக்குறாரு.

அதுமட்டுமில்ல மனைவிக்காக தன்னால முடிஞ்ச பொருளாதார வசதிகளும் செஞ்சு கொடுக்குறாரு. ஆஸ்திரேலியால இருந்து தெலுங்கானால இருக்க அவரோட சொந்த ஊர் கம்மத்துக்கு வராரு. அங்க வந்து அவரோட அம்மா அப்பா கூட தன்னோட மீதி நாட்கள வாழ்றாரு. சாவு நெருங்குறத உணர்றாரு. நம்ம சாகுறத அம்மா அப்பா பாக்க வேண்டாம், கஷ்டப்பட வேண்டாம்னு அவங்களையும் சமாதனப்படுத்திட்டு கடைசியா Bye சொல்லிட்டு கிளம்புறாரு.

ஆஸ்திரேலியால போய் இறுதி நாட்கள கழிக்குறாரு. இதுக்கெல்லாம் முன்னாடியே இன்னொரு விஷயத்தையும் பண்ணி வச்சிருக்காரு. அது என்ன தெரியுமா? ஆஸ்திரேலியால தனக்குனு ஒரு சவப்பெட்டிய முன்னாடியே ரெடி பண்ணி வச்சிட்டாரு. அதுமட்டுமில்ல அங்க வக்கீல் ஒருத்தர்கிட்ட அவரோட நிலைமைய எடுத்து சொல்லி, இறந்த பின்னாடி உடம்ப இந்தியா கொண்டு போக என்ன பண்றதுனு விசாரிச்சுருக்காரு.

விசாரிச்சுட்டு இத பத்தி ஆஸ்திரேலியா நாட்டு அதிகாரிகள் கிட்ட பேசி அதுக்கான கட்டணத்தையும் முன்னாடியே கொடுத்து வச்சுட்டாரு. 2023 மார்ச் 24ஆம் தேதி உடல்நிலை மோசமாகி இறக்குறாரு. அவர் ரெடி பண்ண சவப்பெட்டில அவரோட உடம்பு இந்தியா வந்து சேர்ந்துடுச்சு. ஏப்ரல் 5ஆம் தேதி தகனம் பண்ணிட்டாங்க. அந்த மனுசனோட இறுதி பயணமும் வாழ்க்கை பயணமும் முடிஞ்சுது.

இன்னைக்கு தலைமுறைல சாவுக்கு வயசெல்லாம் கிடையாது. கொரோனா 2வது அலைல இருந்தே அந்த Mindset-க்கு உலக மக்கள் எல்லாரும் வந்தாச்சு. இனி வர தலைமுறைகள் கூட இப்டிதான் இருக்கும் போல. வயசாகி இயற்கையா நிம்மதியான சாவுங்குறது ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்.

இது மூலமா நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா சாவு அப்டிங்குறது ஒரு எதிர்பாராத நிகழ்வு. அத எப்ப நடக்கும் எப்டி நடக்கும்னு பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஹர்ஷவர்தன் மாதிரி லட்சத்துல ஒருத்தருக்கு வேணா தெரியலாம். இவருக்கு வந்த நுரையீரல் புற்றுநோய் மரபு வழியா வந்ததா, புகையிலைனால வந்ததானு லாம் தெரியாது. இப்ப எல்லாருக்கும் எல்லா நோயும் வருது.

அதனால நம்மால முடிஞ்ச அளவு ஆரோக்யமான வாழ்க்கைய வாழ பழகுவோம். அதுதான் நமக்கும் நம்ம சுத்தி இருக்கவங்களுக்கும் நல்லது. அதே மாதிரி வாழ்க்கைல என்ன நடந்தாலும் உடைஞ்சு போய் உக்காரமா, தப்பான முடிவு எடுக்காம, கடைசி வரை போராடுவோம்.

Article By MaNo