Cinema News Specials Stories

Hit Lady ‘Samantha’

Samantha latest still

ஒரு காலத்துல யாரு இந்த பொண்ணுன்னு கேக்க போய், இப்போ இவங்க இல்லனா தமிழ் தெலுங்கு Industry என்ன ஆகும்-ங்கற நிலைமைக்கு வந்துருச்சு?

உண்மையிலே யார் அந்த பொண்ணு “தாக்குதே கண் தாக்குதேனு” கண்ல தாக்கி; “ஒரு கண் ஜாடை செஞ்சு” மனச பறிச்சு; Always A Selfie Pulla-யா; உம் அண்ட வா ஊம்ஊம் அண்டா வானு அண்டத்தயே கலங்கடிச்ச சமந்தா பத்தி தான் இன்னைக்கு நீங்க நிறைய தெரிஞ்சிக்க போறீங்க.

அழகே பொறாமைப்படும் பேரழகு. இந்த அழகு சென்னைல பிறந்த அழகு தான். ஸ்கூலிங் எல்லாமே நம்ப சென்னைல தான் பண்ணாங்க. இது பலரும் அறிந்த உண்மை. படிக்கிறப்போவே தமிழ் Advertisement ஒன்னு பண்றதுக்கான வாய்ப்பு கெடச்சுது.

மெல்ல மெல்ல Ad Shoots,அப்றம் GVM குடுத்த வாய்ப்புல விண்ணை தாண்டி வருவாயா தெலுங்கு படத்துலயும், தமிழ்லயும் நடிச்சிருப்பாங்க. அப்றம் பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு கெடச்சுது. அப்டியே மெல்ல மெல்ல Limelight-க்குள்ள வர ஆரம்பிச்சாங்க சமந்தா.

அப்றம் படத்துக்கும் பஞ்சமில்ல, Controversy-க்கும் பஞ்சமில்ல. சமந்தா நின்ன News, நடந்தா News அப்படிங்கிற மாறி பல விஷயங்கள் அவங்கள சுத்தி நடந்துது. எத்தனை Controversies பாத்தாலும், Personal Lifeல எவ்ளோ Imbalance இருந்தாலும், அத தைரியமா Handle பண்ற ஒரு Quality சமந்தாக்கு இருக்கு.

அவங்க படத்துல வந்தா படம் ஹிட்டு, பாட்டுல வந்தா பாட்டு ஹிட்டு, இன்ஸ்டா லைவ் வந்தா லைவ் கூட ஹிட் ஆகுதேப்பா! சமந்தா Real Life-லயும் ஒரு ஹிட் லேடி தான். பிரதியுஷான்னு ஒரு நிறுவனம் ஆரம்பிச்சு பலருக்கும் உதவி பண்றாங்க.

கல்யாணத்துக்கு அப்றம் எவ்ளவோ விஷயங்கள் சுத்தி நடந்தாலும், உயிருக்கு உயிரா இருக்கவங்கள பிரிஞ்சாலும், எந்த இடத்துலயும் சமந்தா தளர்ந்து போனதே இல்ல. ஒவ்வொரு நாளும் அவங்க ரசிகர்களுக்காக நல்ல படங்கள கொண்டு பொய் சேர்க்க முயற்சி எடுத்துட்டே தான் இருக்காங்க.

சிரிப்பு அழுகை கவலைனு எல்லா பரிமாணத்தையும் அவங்க ரசிகர்கள் கிட்ட மறைக்காம மனசுல தோன்ற விஷயங்கள பேசுற சமந்தா இன்னைக்கு இல்ல என்னைக்குமே மாஸ் தான்.

Article By RJ Naga