Cinema News Specials Stories

வந்தியத்தேவன் யார்? வந்தியத்தேவன் குடும்பம் பத்தி தெரியுமா?

வல்லவரையன் வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலனுடைய நண்பன், அதிபுத்திசாலி, சிறந்த வீரன், வாணர் குலத்தை சேர்ந்தவன். சோழர்களுக்கு ஒற்றன் வேலை பார்த்து உதவி பண்ணிட்டு இருக்கவன். இதுதான் பொன்னியன் செல்வன் படம் பார்த்தவங்களுக்கு தெரியும். இவர பத்தி நமக்கு தெரியாத சில விஷயங்கள இப்ப நாம பாக்க போறோம்.

சோழப் பேரரசோட கட்டுப்பாட்டுல அமைஞ்சிருந்த “வல்லவரையர் நாடு” அப்படினு சொல்லப்பட்ட குறுநிலத்தின் மன்னர் தான் வந்தியத்தேவன்.

வாணர் குலம் வந்தியத்தேவனோட முன்னோர்கள் காலத்துலயே சோழர்கள் கட்டுப்பாட்டுக்குள்ள வந்துருச்சு. சோழர் கட்டுப்பாட்டுல இருந்த சிற்றரசர்கள் தான் வாணர், பழுவேட்டரையர் இன்னும் பலர்.

வந்தியத்தேவனுடைய முன்னோர்கள் ஆண்ட பகுதி வாணகப்பாடினு சொல்றாங்க. வாணகப்பாடி அப்படிங்குறது இன்னைக்கு இருக்க வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ஆந்திரப்பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்புனு கூறப்படுது.

அதுவே பொன்னியின் செல்வன் கதைப்படி வந்தியத்தேவன் காலத்துல அவர் ஆட்சி செஞ்ச வல்லவரையர் நாடுங்குறது இன்னைக்கு இருக்க சேலம், ஓமலூர், காக்காபாளையம் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்புனு கூறப்படுது.

வந்தியத்தேவன் குறுநில மன்னர் மட்டுமில்ல, சோழர்களின் போர்ப்படை தளபதியாகவும் திகழ்ந்தவர். ராஜ ராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் முதன்மை படைத்தளபதியா பணியாற்றியிருக்காரு. சோழர்களுக்கு ரொம்ப நெருக்கமானவர்.

வந்தியத்தேவன் ராஜ ராஜ சோழன் கிட்ட தளபதியா இருந்த காலத்த விட, ராஜேந்திர சோழன் கிட்ட தான் அதிக நாட்கள் தளபதியா பணியாற்றியிருக்காரு. ஆதித்த கரிகாலனுக்கும் வந்தியத்தேவனுக்குமான வயசு வித்தியாசம் உண்மைலயே அதிகம்.

வாள் வீச்சில் சிறந்த வீரன் வந்தியத்தேவன்… ரொம்ப புத்திசாலி, போர்னு வந்துட்டா தனி ஒரு ஆளா பத்து பேர சமாளிக்க கூடிய திறன் படைத்தவர்… அதனால தான் அவர் முதன்மை படைத்தளபதியா இருந்தாருனு சொல்றாங்க.

ஆதித்த கரிகாலன்… ராஜ ராஜ சோழனோட சகோதரி, அதிபுத்திசாலி, பேரழகி, சோழ இளவரசி குந்தவையின் கரம்பிடித்த வீரன். இவங்க கல்யாணம் நடந்ததுக்கான சான்றுகள் பல கல்வெட்டுகள்ல இன்னமும் இருக்கு.

வந்தியத் தேவனுக்கு ஒரு மனைவி தான் அப்படினு சிலர் சொல்றாங்க, இல்ல 2 மனைவினு சிலர் சொல்றாங்க, இல்லல்ல 5, 6 மனைவி இருந்தாங்க இதுலாம் அந்த காலத்துல சாதாரண விஷயம் அப்படினும் சிலர் சொல்றாங்க. அதனால அவருக்கு எத்தன மனைவி இருந்தாங்க அப்படிங்குற விஷயம் குழப்பத்துலயே இருக்கு.

கடைசியா அதுமட்டுமில்ல வந்தியத்தேவன் வாணர் குல அரசர் இல்ல, அவர் ஒரு பல்லவர் அப்படினும் ஒரு சிலர் சொல்றாங்க. இத தாண்டி கதைப்படியும் வரலாற்று அறிஞர்களோட தரவுகள் படியும் பார்த்தா வந்தியத்தேவனோட குடும்பம், அப்பா, அம்மா பத்தி தெளிவா எதுவும் இல்ல. வந்தியத்தேவனுக்கு பின்னான அவருடைய சந்ததி பத்தியும் எந்த விஷயமும் இல்ல. வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் கூட குழந்தைகள் கிடையாதுனு சொல்றாங்க.

வந்தியத் தேவனோட கடைசி காலம் பத்தின விவரமும் காணப்படுல. வந்தியத்தேவனன் உடைய வரலாறு பத்தி உங்களுக்கு தெரிஞ்ச சுவாரஸ்யமான விஷயங்கள், தெளிவான விளக்கங்கள் எதாவது இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

Article By MaNo