Cinema News Specials Stories

YES IT’S “SID SRIRAM”

Sid-Sriram

காலைல தூங்கி எந்திரிச்சு டீ கடைக்கு போனா ‘பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி’ , சரின்னு ஹோட்டல் போனா ‘ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்’ , வேலைய முடிச்சிட்டு TIRED AH வந்தா ‘நான்தான் இங்கே விசிறி’ , Bike Trip-னா ‘யார் அழைப்பது’ , அப்பாவ மிஸ் பண்ணா ‘குறும்பா’ , WIFE AH மிஸ் பண்ணா ‘தாரமே தாரமே’ , அம்மாவ மிஸ் பண்ணா ‘போ உறவே’ , FRIEND AH மிஸ் பண்ணா ‘கதைப்போமா’ , LOVE-க்கு சொல்லவே வேணாம் BOOK EH எழுதலாம். இதுக்கு மேல GOOGLE கூட CLUE குடுக்க முடியாது அந்த அளவு குடுத்துருக்கேன். YES IT’S “SID SRIRAM”

இவரு பிறந்தது நம்ம ஊரு சென்னைல தான் சென்னை CITY GANGSTA அப்படிங்கிற மாறி சுத்தலாம்னு நெனச்ச அவர அவங்க அம்மா அப்பா CALIFORNIA க்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. 3 வயசுல நம்ம பல பேருக்கு பேச்சே வந்திருக்காது. ஆனா அப்போவே இவருக்கு MUSIC வந்துருக்கு.

அம்மா லலிதா ஸ்ரீராம் இவரோட MUSIC SKILLS AH வெளிய கொண்டு வர ரொம்போவே HELPFUL AH இருந்துருக்காங்க. இவரு LIFE STORY பத்தி தெரிஞ்சிக்கும்போது தான் MUSIC PRODUCTION & ENGINEERINGனு COURSE இருக்குனே தெரிஞ்சிக்கிட்டேன்.

இதுவரைக்கும் 79 songs தமிழ்லயும், 77 songs தெலுங்குலயும், 10 பாட்டு மலையாளத்துலயும், 6 song கன்னடத்துலயும் பாடி ALL AREA லயும் கில்லியா இருக்காரு. எப்போ ஹாலிவுட் போறிங்க? அப்டினு பல பத்திரிக்கை நண்பர்கள் கேப்பாங்கனு சொல்ல வந்தேன்பா.

2016ல இருந்து 2021 வரைக்கும் கைய விட்டு எண்ணுனதுல 17 AWARDS வாங்கிருக்காரு. நடுல வானம் கொட்டட்டும் படத்துல Music Director Ah அவதாரம் எடுத்தாரு. 3 வயசுல ஆரம்பிச்ச இசை பயணத்துல ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதாவது Try பண்ற அவரோட ஆர்வமும் Energyம் தான் சித் ஸ்ரீராம் கிட்ட இருந்து எனக்கு கிடைக்குற Motivation.

எனக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு அவர் மட்டுமில்லாம, அவர் பாடல்களும் Motivating Ah இருக்கு. Proud to be a SID SRIRAM fan.

Article RJ Naga