Specials Stories

உற்சாகத்தின் உச்சம் – “உதித்”

நம் Playlist-ல் இருந்து கொண்டு நம்மை உருகவைக்கும் குரலாகவும், உற்சாகப்படுத்தும் குரலாகவும் ஒலிக்கும் ஒரு உன்னத குரல் உதித் நாராயணின் குரல். இன்று (01.12.2020) அவர் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பொதுவாக சினிமா பாடல்கள் பாடுபவர்களை திறமைசாலியாக பார்ப்பது வழக்கம், ஆனால் 28 மொழிகளில் 20000-ற்கும் மேற்பட்ட பாடல்களை ஒரு பாடகர் பாடினால், அவரை திறமையின் Encyclopedia என்று தான் குறிப்பிட வேண்டும். இவ்வளவு பாடல்களை பாடி மக்கள் மனதில் உதித் இடம் பிடிக்க முக்கிய காரணம் அவரது தனித்துவமான காந்த குரல் தான்.

Udit Narayan jha (@RealUditNarayan) | Twitter

பாலிவுட்டில் தனக்கென்ன தனி சாம்ராஜ்யமே அமைத்து மக்கள் மனதை ஆண்டு வந்த உதித், தமிழில் பாடிய முதல் பாடல் காதலன் திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அமைந்த “காதலிக்கும் பெண்ணின்” பாடல் தான். முதல் பந்திலேயே உதித் சிக்ஸர் அடித்தது போன்ற ஒரு சூப்பர் ஹிட் பாடலை கொடுத்து தன் கோலிவுட் Hit Numbers கணக்கை தொடங்கினார்.

அதன் பின் குளுவாயில்லே, ரோமியோ ஆட்டம் போட்டால், சோனியா சோனியா போன்ற கேட்போரை குஷியாக்கும் பாடல்களை பாடி Cute குரலரசனாய் வலம் வந்தார் உதித். ஏ.ஆர் ரஹ்மான், வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, தேவா போன்ற முன்னணி Music Director-களுடன் இணைந்து காலத்தால் அழியாத அழகிய பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இதுவரை 50-ற்கும் மேற்பட்ட பாடல்களை உதித் பாடியுள்ளார் .

சிவாஜி திரைப்படத்தின் சஹானா, யாரடி நீ மோஹினி திரைப்படத்தின் எங்கேயோ பார்த்த மயக்கம், ஆதலால் காதல் செய்வீர் படத்தின் அலைபாயும் நெஞ்சிலே போன்ற உதித்தின் பாடல்கள் முரட்டு Single-களையும் காதலை தேடி அலைய வைத்தது என்றே கூறலாம். எப்பேற்பட்ட வரிகளுக்கும் உதித்தின் குரல் உயிர் கொடுக்கும் என்று சொன்னால், அது மிகையாகாது.

உதித்தின் உன்னத கலைப்பணியை பாராட்டும் விதத்தில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. அதுமட்டுமன்றி சிறந்த பாடகருக்கான மூன்று தேசிய விருதுகளையும், சிறந்த தயாரிப்பாளருக்கான ஒரு தேசிய விருதையும் உதித் பெற்றுள்ளார். தனது கலையுலக வாழ்க்கையில் உதித் நாராயண் 30-ற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015-ஆம் ஆண்டிற்கு பிறகு உதித் நாராயண் இதுவரை எந்த தமிழ் பாடலும் பாடவில்லை என்பது அவரது தமிழ் ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் விஷயமாக இருக்கிறது. உதித் நாராயணின் கோலிவுட் version 2.0-வை எதிர்பார்த்து அவரது கோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

” அலைபாயும் நெஞ்சிலே உதித்தின் ராகங்கள் மச்சி ! மச்சி ! ” என்று நம் Playlist-ஐ ஆளும் உதித் நாராயண் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.