யுவன் சங்கர் ராஜா தயாரித்து வெளிவரவிருக்கும் “தப்பு பண்ணிட்டேன்” Single பாடலின் teaser Youtube-ல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்.
இப்பாடலுக்கு ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார். இப்பாடலின் வீடியோவை டாங்லீ ஜம்போ இயக்கியுள்ளார். இப்பாடல் நாளை (ஜூலை 8) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், இப்பாடலின் teaser தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் viral ஆகி வருகிறது.
பொதுவாக சிம்பு பாடும் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் பாடல்களாகவே அமையும். அதிலும் குறிப்பாக அவர் பாடும் காதல் பாடல்கள் பல இளைஞர்களின் Whatsapp status-ல் வலம் வரும் வகையில் அமையும். “தப்பு பண்ணிட்டேன்” பாடலும் ஒரு காதலன், தன் பிரிந்து போன காதலியை நினைத்து பாடும் பாடலாக அமைந்து இருக்கக் கூடும் என தெரிகிறது.
இப்பாடலில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் U1 Records நிறுவனம் இப்பாடலை வெளியிடுவதால் இப்பாடலின் மேலுள்ள எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள teaser-ல் சிம்புவின் பின்னணி குரலில் சில உணர்ச்சிகரமான வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தப்பு பண்ணிட்டேன்” பாடலின் teaser வீடியோவை கீழே காணுங்கள்.