Cinema News Stories Trending

கோப்ரா – தொடர்கிறது ….

சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிவிட்டது என்ற நற்செய்தியை அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோப்ரா திரைப்படத்தின் பாடல் மற்றும் Fist look Update-கள் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வந்த நிலையில், படப்பிடிப்பு தொடர்கிறது என்ற Update சியான் விக்ரம் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இந்த செய்தியை ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டது தான் Highlight.

அவர் ட்விட்டரில் ” COBRA Resumes ( தொடர்கிறது ) ” என குறிப்பிட்டு, சியான் விக்ரம் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்துடன் சேர்த்து பதிவை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்க்கும் போது, அது படப்பிடிப்பின் ஒரு Shot Frame போல தெரிகிறது. மேலும் அந்த Frame-ல் ஒரு வீடியோ கேமரா, சில துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது, படத்தின் ஒரு முக்கிய காட்சியாக இது இருக்கும் என கணிக்க முடிகிறது. இந்த காட்சியில் விக்ரம் கருப்பு T-Shirt-ம் கருப்பு குல்லாவும் அணிந்திருக்கிறார். இப்படத்திற்காக விக்ரம் கடுமையான உடற்பயிற்சியை செய்திருக்கிறார் என்பது அவரது தோற்றத்தை பார்த்தாலே தெரிகிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பது கோப்ராவை மேலும் பிரம்மாண்டமாக்கிறது.

கோப்ரா திரைப்படத்தை திரையில் காண சியான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காத்திருப்போம் ! கோப்ரா திரையரங்குகளின் திரையை சீறும் வரை !!!