Stories Trending

பிறந்தநாள் கொண்டாடும் காஜல் அகர்வால் !!!

Kajal Agarwal
Kajal Agarwal

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளவர் நடிகை காஜல் அகர்வால் . இவர் தனது 35-வது பிறந்தநாளை இன்று (ஜூன் 19, 2020) கொண்டாடுகிறார்.

2004-ஆம் ஆண்டு வெளிவந்த க்யூன் ஹோ கயானா என்ற ஹிந்தி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் காஜல் அகர்வால். ஆரம்பகாலத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதற்கு பின் தன் தனித்துவமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்காத கதாநாயகியாக காஜல் மாறினார்.

தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்துவந்த காஜல், பேரரசு இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்து வெளிவந்த பழனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2009-ல் S.S ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மகதீரா திரைப்படம் காஜலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் தமிழிலும் மாவீரன் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் பல வெற்றிப்படங்களை கொடுத்த காஜல் 2012-ல் முதல் முறையாக தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக காஜலுக்கு அமைந்தது. துப்பாக்கி திரைப்படம் 100 கோடி ருபாய் வசூல் செய்த இரண்டாவது தமிழ்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சூர்யா, அஜித் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன்  துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், மாற்றான், விவேகம்  போன்ற படங்களில் நடித்த காஜல் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். நடிப்பது மட்டுமின்றி கன்னடத்தில் வெளியான சக்ரவியூகா எனும் திரைப்படத்தில் என்னாய்து எனும் பாடலையும் காஜல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காஜல் அகர்வால் தமிழில் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் கோமாளி. இப்படத்திலும் இவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இணையத்தில் உள்ள ரசிகர்கள் #HappyBirthdayKajal #HBDKajalAggarwal #HBDKajal என தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு சூரியன் FM  சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

About the author

Santhosh