Stories Trending

திரையுலகை துக்கத்தில் ஆழ்த்தி மறைந்த இயக்குனர்!!!

Sachu
Sachu

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் சச்சி இருதய பிரச்சனைகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து திருசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 2 நாளாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அவரது உயிர் உடலை விட்டு பிரிந்தது.

மலையாள திரையுலகிற்கு இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. 48 வயதான சச்சி சாக்லேட், ராபின்ஹூட், மேக்கப்மேன் என்று பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

இவர் சொந்தமாக கதை எழுதி இயக்கியுள்ள அனார்கலி, ஐயப்பனும் கோஷியும் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவரது இறப்பிற்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கலை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் இவரது ஈடில்லாத இறப்பை தங்களால் தாங்க முடியவில்லை என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குனர் சச்சியின் மறைவுக்கு சூரியன் FM சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.