Cinema News Stories Trending

மரண மாஸான மாஸ்டர் update !!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தியாவிலேயே அதிக like-களை வாங்கி குவித்த டீஸர் என்ற பெருமையையும் மாஸ்டர் டீஸர் பெற்றுள்ளது.

டீஸர் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் டீஸரை Youtube-ல் கண்டுகளித்துள்ளனர். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இப்படத்தின் Update-க்காக நீண்ட நாட்கள் காத்திருந்த நிலையில், இந்த டீஸர் Update அவர்களுக்கு தீபாவளி விருந்தாய் அமைந்தது. தளபதி விஜயின் ரசிகர்களை உச்சக்கட்ட உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த Update.

ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், இந்த டீஸர் அந்த எதிர்பார்ப்பை மேலும் மலையளவில் அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோஹனன், சஞ்சீவ், தீனா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

அனிருத் இசையில் வெளியாகியுள்ள அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வரும் நிலையில், டீஸரிலும் அனிருத்தின் இசை வெறித்தனமாக அமைந்துள்ளது. விரைவில் இப்படத்தை திரையில் காண தமிழ் சினிமா ரசிகர்கள் திரை மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.