Cinema News Stories Trending

Lady Superstar 36 வயதினிலே !!!

ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

2003-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நயன்தாரா, தன் தனித்துவமான நடிப்புத் திறமையாலும், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். பல வெற்றிகளை கண்ட நயன்தாரா சில தோல்விகளையும் தன் வெற்றிப்பாதையில் சந்தித்துள்ளார்.

எப்போதெல்லாம் இவரது திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதோ, என்ற சந்தேகம் எழுகிறதோ அப்போதெல்லாம் “நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்று பதிலளிக்கும் வகையில் வெற்றிப்படங்களில் Comeback கொடுப்பது நயன்தாராவின் வழக்கம். இதுவே இவரது வெற்றியின் தாரக மந்திரமாய் இருந்து வருகிறது.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை ரசிகர்கள் சமீப காலங்களில் விரும்பி பார்ப்பதற்கு நயன்தாரா ஒரு முக்கிய காரணம். மாயா, டோரா, கோலமாவு கோகிலா, அறம், கொலையுதிர் காலம், என பல வித்யாசமான Heroine Centric படங்களில் நயன்தாரா நடித்து ஒரு புது Formula-வை தமிழ் சினிமாவில் உருவாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

அந்த வகையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் “அவள்” படத்தை இயக்கிய மிலின்ட் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம் நெற்றிக்கண். நயன்தாராவின் பிறந்தநாள் விருந்தாக இப்படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பார்வையற்ற பெண்ணாக இப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயா முதல் நெற்றிக்கண் வரை புதிய முயற்சிகளை எடுப்பதற்கு நயன்தாரா ஒருபோதும் தவறியதில்லை. இப்படமும் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பதே நயன் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.