ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘Selfie’ பட வெளியீட்டை முன்னிட்டு படத்தின் இயக்குநர் மதிமாறன் சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றார்.
பிரபல இயக்குநர் வெற்றிமாறனின், உதவி இயக்குநர் மதிமாறனின் அறிமுகப் படம் தான் ‘Selfie’. நேர்காணலுக்கு வந்திருந்த மதிமாறனிடம், இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் குறித்த கேள்வி எழுப்பினோம்.
அதற்கு பதிலளித்த அவர், “நான் உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் படம் ‘ஆடுகளம்’. அப்போது, உதவி இயக்குநராக இருக்கும் போது எவ்வளவு உழைக்கிறமோ அது நம்முடைய படத்தில் பிரதிபலிக்கும் என இயக்குநர் வெற்றிமாறன் சார் கூறுவார். உதவி இயக்குநராக ஒரு படத்தில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கிறோமோ, அப்படித்தான் நம் படத்திலும் வேலை பார்ப்போம், சோம்பேறியாக காலத்தை கடத்த மாட்டோம் என்றார். அப்படியான அர்ப்பணிப்புடன் நான் ஒரு படத்தில் வேலை செய்தேன். அந்த பலனை இப்போது அனுபவிக்கிறேன்” என்றார்.
மேலும் படம் குறித்த நிறைய சுவாரஸ்யமான பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணுங்கள் :