Specials Stories

கோலிவுட் ‘கிங்’ சியான் !!!

கடின உழைப்பிற்கு மற்றொரு பெயர் உண்டெனில் அது கென்னடி ஜான் விக்டர் எனும் ‘சியான் விக்ரம்’ தான்.எந்த ஒரு பின்புலனும் இன்றி தானே கையூன்றி பல தோல்விகளை தோழனாய் தோளில் ஏந்தி அவமானங்களை சன்மானமாய் நினைத்து ,தமிழ் சினிமாவில் ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் சியான் விக்ரம்.

நடிக்க வரும் முன்பே பல விளம்பரங்களில் தன்னை விளம்பர படுத்தி கலை உலகில் கால் பதிக்க காத்திருந்துள்ளார்.’ஹீரோ’ ஆன ஆரம்ப காலகட்டத்தில் பல ஹீரோக்களுக்கு குறிப்பாக ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவிற்கும் ,’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அப்பாஸிற்கும் ,அமராவதி படத்தில் ‘தல’ அஜித்திற்கும், ‘குருதி புனல்’ படத்தில் உலகநாயகனிற்கும் dubbing கொடுத்துள்ளார் சியான்.

அதுமட்டுமின்றி தன் இளமை பருவத்’தில்’ கல்லூரி படிப்பின் போது bike accident-ல் காலில் அடிபட்டு fracture ஆகி நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் சொல்ல இரண்டு வருடம் தொடர்ந்து bed rest..அதற்கு பின் தன் விடாமுயற்சியால் நடக்க ஆரம்பித்தார் விக்ரம். நிஜத்தில் நடந்ததை ‘தில்’ படத்தின் second halfல் பார்த்திருப்போம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘பாம்பே’ படத்தின் முதல் hero choice விக்ரம்.அப்போது இன்னொரு படத்தில் commit ஆகி இருந்ததால் அதில் நடிக்க மறுத்தார் விக்ரம்.

பின் இயக்குனர் பாலா விக்ரமின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் உருவாக்கிய படம் ‘சேது’. விக்ரமின் carrier-ல் மிக முக்கியமான ஒரு படம். அதற்காக தன்னை வருத்தி மொட்டை அடித்து உடலை குறைத்து கலை உலகத்திற்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர் சியான். மேலும் அன்று வரை சாதா விக்ரமாக இருந்த அவர் சியான் விக்ரமாக மாறினார். பின் அவர் நடித்த படங்கள் அனைத்தும் hit அடிக்க ரசிகர்கள் அவர் படத்திற்கு banner அடிக்க துவங்கினர்.

மேலும் பாம்பே படத்தை தவற விட்டாலும் மணிரத்னத்தின் ராவணனை தவற விட வில்லை. தன் அசாதாரண நடிப்பால் முதன் முதலில் ஒரு தமிழ் படம் ஜெர்மன் மொழியில் டப் செய்யப்பட்டது என்றால் அது தான் ‘ராவணன்’.அதுவும் வைரமுத்து வரிகளில் ‘உசுரே போகுதே’ பாடல் காட்சி அமைக்கப்பட்ட விதம், அதில் நடித்திருத்த விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் காட்சிகள் காண்போரை இன்றும் ரசிக்கவைக்கும். மேலும் சாமுராய் படத்தில் வரும் ‘மூங்கில் காடுகளே’ பாடல் இன்றும் நமது playlist-ல் favorite ஆக இருக்கும்.ஆனால் சியான் விக்ரம் மொபைலில் அந்த பாடல் தான் பல வருடங்களாக அவரின் ரிங்க்டோன் ஆக இருந்துள்ளது.

பின் விக்ரமின் carrier-ல் இன்னொரு முக்கியமான நபர் பிரம்மாண்டத்தின் மறுஉருவம் இயக்குனர் ஷங்கர். ‘அந்நியன்’ இன்று வரை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம். அதிலும் அம்பி,ரெமோ,அந்நியன் என்ற three different characters நமது all-time favorite. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரமின் அசாத்திய நடிப்புக்கு ரசிகர்கள் கோடி.

நடிப்பது மட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியுள்ளார் சீயான். ஒரு கேரக்டர் கொடுத்தால் அதில் நடிப்பது மட்டும் இவரது வேலை இல்லை அதில் தன்னை விட நடிப்பதற்கு ஆளே இல்லை என்கிற அளவுக்கு நடித்து காட்டுவது தான் இவரின் நேர்த்தியான வேலை. மேலும் இவரின் இன்னொரு முக்கிய படம் சாமி. அதுவரை வந்த போலீஸ் படங்களில் முற்றிலும் மாறுபட்ட போலீசாக விக்ரம் ஆறுச்சாமியாக வாழ்ந்திருப்பார்.

பின் அந்நியனை தொடர்ந்து விக்ரம் ஷங்கருடன் மறுபடி கைகோர்த்த படம் ‘ஐ’. கிட்டத்தட்ட ‘ஐ’ படத்திற்காக 30 கிலோ உடல் எடை குறைத்து மொட்டை அடித்து அடையாளம் தெரியாத அளவிற்கு தன்னை வருத்திக்கொண்டார்.தொடர்ந்து 4 மணிநேரம் MAKEUP போட்டுகொண்டு மேலும் குனிந்தபடியே நடித்து ‘ஐ’ படத்தை தனது நடிப்பால் உலகத்தரத்திற்கு எடுத்து சென்றவர் சீயான்.

இப்படி பிதாமகனாக, காசியாக, அருளாக, டேவிட்டாக, ஜெமினியாக ,பீமாவாக ஸ்கெட்ச் போட்டு பத்து எண்றதுக்குள்ள நடிப்பில் தாண்டவம் ஆடும் கோலிவுட் ‘கிங்’ சியானுக்கு சூரியன் FM-ன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

About the author

alex lew