Specials Stories

உங்கள் வாயை நினைத்து பெருமை கொள்ளுங்கள் – World Oral Health Day 2022

World-Oral-Health-Day

World Oral Health Day, ‘உலக வாய் சுகாதார தினம்’ ஒவ்வொரு வருடமும் மார்ச் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

நம் உடல் என்பதே ஒரு மிகப்பெரிய பொக்கிஷம். அதில் இதுதான் முக்கியமான உறுப்பு மற்றதெல்லாம் இதற்குப் பிறகு தான் என எண்ணுவது தவறு. நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அதற்கான வேலைகளை தொடர்ச்சியாக இடையூறின்றி செய்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும். World Oral Health Day என்பது நமது வாயின் சுகாதாரம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ஒரு தலைப்பின் கீழ் மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குவார்கள். அப்படியாக 2021, 2022 & 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கு ‘Be Proud Of Your Mouth’ என்பதே theme.

உங்கள் வாயை நினைத்து பெருமை கொள்ளுங்கள் என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். எனவே World Oral Health Day 2022-இல் நமது வாய் சுகாதாரமின்மையின் அறிகுறிகள், அதற்கான காரணங்கள், அதனால் உருவாகும் நோய்கள் மற்றும் இவற்றிலிருந்து நமது வாயை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

உங்கள் வாயின் சுகாதாரம் மோசமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா?

  • பல், ஈறு அல்லது தாடையில் வலி
  • ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் புண்
  • தளர்வான பற்கள்
  • பல் மேற்பரப்பில் மாற்றங்கள்
  • வாய் துர்நாற்றம்
  • வாய் புண்கள், திட்டுகள் அல்லது கட்டிகள்
  • தொடர்ச்சியாக வாய் வறண்டு போதல்
  • உணவு மெல்லும் போது வலி

இவை அனைத்தும் உங்கள் வாயின் சுகாதாரமின்மையை உணர்த்தும் அறிகுறிகளாகும். ஆரம்பத்திலேயே இவற்றை சரிசெய்து விட்டால் நமது உடலை பெரிய அளவிலான அபாயத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

இப்போது வாயில் உருவாகும் பிரச்னைகளுக்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

  • புகைப்பிடித்தல்
  • மதுப்பழக்கம்
  • சரியாக பல் துலக்காமல் இருப்பது
  • சர்க்கரை பொருட்கள் மற்றும் சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள் அதிகமாக குடிப்பது
  • நீரிழிவு நோய்
  • மரபு வழி பிரச்னை
  • நெஞ்செரிச்சல்
  • போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது
  • தூக்கமின்மை

இவற்றையும் ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால் நமது உடலை பெரிய அளவிலான அபாயத்தில் இருந்து காக்கலாம்.

வாய் சுகாதாரமின்மை தொடர்வதால் உருவாகும் பிரச்னைகள் என்னவென்று தற்போது பார்ப்போம்.

  • பற்சிதைவு, பற்கள் விழுதல்
  • ஈறுகளில் வீக்கம் மற்றும் கடுமையான வலி
  • அல்சர்
  • நாள்பட்ட வாய்ப்புண்
  • வாய் புற்றுநோய்
  • உணவு உட்கொள்ள இயலாமை
  • தொடர் வாய் துர்நாற்றம்

இந்த நிலைக்கு நமது வாயின் சுகாதாரத்தை கொண்டு செல்வது மிகவும் அபாயகரமானது. உடனடியாக சம்மந்தப்பட்ட மருத்துவரை அணுகி பிரச்னைகளை சரி செய்ய வேண்டும்.

மேற்கூறிய பிரச்னைகளில் சிக்காமல் வாயை சுத்தமாக பராமரித்து நமது உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமென்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும், இருந்தாலும் பார்ப்போம்.

  • நாளுக்கு 2 முறை பற்களை சுத்தமாக துலக்குதல்
  • போதிய அளவு தண்ணீர் குடித்தல்
  • உணவுக்கு முன், பின் வாய் கொப்பளித்தல்
  • மது, புகை பழக்கங்களை கைவிடுதல்
  • சர்க்கரை உணவுகளை குறைத்தல்
  • சரியான தூக்கம்
  • சத்தான உணவு

இப்படி நமது வாயினை சுத்தமாக பராமரித்து பேணி பாதுகாத்து வந்தால் நிச்சயமாக World Oral Health Day-இன் இந்த வருட தலைப்பான ‘Be Proud Of Your Mouth’ என்பதற்கேற்ப நிச்சயமாக நமது வாயை நினைத்து நாம் அனைவரும் பெருமைப்படலாம்.

Article By MaNo