உங்களுக்கு பிடிச்ச விஷயத்துக்காக நீங்க Workout பண்ணா….உங்களுக்கு பிடிச்ச விஷயமெல்லாம்
தானா Workout ஆகும்….!!!- இந்த தத்துவத்த சொன்னது “தமன்னா“

எது நம்ம கல்லூரி, பாகுபலி படத்துல நடிச்ச Actress தமன்னாவான்னு…ஆச்சர்யபட்டிங்கன்னா…இன்னொரு Surprise…Back to the roots அப்படின்னு….ஒரு புத்தகத்தையும்…Luke என்பவரோட எழுதி, அந்த புத்தகத்த Publish-உம் பண்ணிருக்காங்க பார்க்க பார்பி டால் மாதிரியே இருக்க நம்ம நடிகை தமன்னா….!
மும்பையில, மாடலிங் செஞ்சு,ஹிந்தில முதல் படத்த நடிச்சு ‘கேடி’ படம் மூலமா தமிழ் சினிமால நுழைஞ்சு, கன்னடம், தெலுங்கு, மராத்தின்னு நிறைய மொழிகள்ல நடிச்சு, நடனத்துல தனக்கான தனி முத்திரை பதிச்சுட்டுதான் இருக்காங்க நம்ம cute பொம்மாயி தமன்னா.
கலைத்துறையில சிறப்பா பயணம் செஞ்சு கலைமாமணி விருது வாங்கின பாகுபலி அவந்திகா, பார்பி டால் தமன்னாவுக்கு சினிமா பயணமும், வாழ்க்கை பயணமும் சிறக்க சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.