தளபதி விஜய்யின் 10 சிறந்த சினிமா ஜோடிகள் யார் யார் தெரியுமா? – டாப் 10 லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் தளபதி விஜய் நடித்த படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை வென்ற கதாநாயகிகள் யார் யார்.. எந்த படங்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது என்கிற பட்டியல் இதோ. இதில் வசீகரா, மெர்சல் என பல படங்கள் உள்ளன.
நம்ம எல்லாத்துக்கும், விஜய்னு சொன்ன உடனே நிறைய mass ஆன scenes தான் ஞாபகத்துக்கு வரும். But, அவரோட on pair actress ஓட செம்மையான performance ஏராளம்… அதுல top 10 தான் நம்ம இப்ப பாக்க போறோம்.
குஷி

குஷி னு சொன்ன உடனே நம்ம எல்லாத்துக்கும் ஞாபகம் வரது, அந்த இடுப்ப மறைக்கிற scene தான்… அந்த அளவுக்கு அந்த Scene பயங்கர hit uhh… In fact அந்தப் படம் full ah ve விஜயும் ஜோதிகாவும் சின்ன சின்னதா போடுற சண்டை நமக்கு பாக்க அவ்வளவு அழகா இருக்கும். அந்த விளக்க அணைக்கிற Scene இருக்கே… என்னதான் அதுக்கு அடுத்து நிறைய love movies வந்தாலும், இந்த scene அப்போ கொடுத்த impact இன்ன வரைக்கும் வேற எந்த scene um தரல அப்படின்றது தான் உண்மை.
தெறி

இப்போ இருக்க actress la எந்த actress விஜய் ஓட படம் பண்ணா நல்லா இருக்கும்னு நீங்க ஒரு poll எடுத்தீங்கனா, 90 percent ku மேல vote Samantha க்கு தான் வரும்… ஏனா அவங்க தெறி படத்துல கொடுத்த Impact அப்படி. என்னதான் சமந்தா கொஞ்ச நேரம் தான் வந்திருந்தாலும், படம் முடிஞ்சு வெளிய வந்ததுக்கு அப்புறம் full ah பேச வச்சது விஜய் and சமந்தா ஓட on pair தாங்க. விஜய் ஓட அந்த Cute reaction ku samantha ஓட அந்த beautiful expression, அந்த flashback full ahh ve travel ஆகும்.
கில்லி

விஜய் ஓட career ல most celebrated movies அப்படின்னு ஒரு list எடுத்தோம்னா, அதுல கில்லிய தவிர்க்கவே முடியாதுங்க. எதிர்பாராத விதமா திரிஷாவை சந்திப்பாங்க. யாருக்கும் தெரியாம Hero, Heroine ah வீட்ல ஒழி வைப்பாங்க. அங்க இருந்து சின்னதா ஆரம்பிச்ச காதல், கடைசில Heroine ah flight ஏத்தி விடப் போகும்போது போக மனசு இல்லாம “எனக்கு காரப்பொறி சாப்பிடணும் போல இருக்கு ” அப்படின்னு சொல்லி hero ஓட இருப்பாங்க. Heroine ah flight la ஏத்திவிட்டதுக்கு அப்புறம் தான் தெரியுது Hero ku Heroine மேல எவ்ளோ love uhh nu. படம் முடியும்போது அவங்க சேர்ந்ததுக்கு அப்புறம் அதன் படம் பார்த்த எல்லாத்துக்குமே கண்டிப்பா சந்தோஷம் வரும். அதுதான் Velu & Dhanalakshmi combo ஓட specialityயே!!
மெர்சல்

Next Door boy nu நம்ம நிறைய actors ah கூப்பிட்டு பார்த்திருக்கோம். But next door girl மாறி நடிக்கிற actress ndra பட்டியல்ல நித்யா மேனன் ah தவிர்க்கவே முடியாது… இந்த movie la um short time தான் வருவாங்க, but அவங்க அந்த movie ku கொடுத்த impact தான் அந்த படத்தோட மிகப் பெரிய வெற்றி. விஜய் ஓட இவங்க வர Scenes எல்லாமே அவ்ளோ அழகா இருக்கும்… ” ஐசு ஐசு ” அப்படின்னு செல்லம்மா விஜய், நித்யா மேனன் ah கூப்பிடுறது அவளோ cute ah இருக்கும். அந்த heartbreaking cesarean scene பார்க்கும்போது எல்லாருமே கண்டிப்பா கண் கலங்கி இருப்போம்… அந்த அளவுக்கு தளபதி வெற்றிமாறன் And ஐஸ்வர்யா அவங்களோட performance இருக்கும்.
சச்சின்

சில நாட்களுக்கு முன்னாடி Re-release ஆகி வெற்றி அடைந்த விஜய் ஓட movie தான் சச்சின். இத்தனை வருஷம் கழிச்சு ஏன் audience மத்தியில இந்த படத்துக்கு அவ்ளோ craze இருக்குனா, purely because of Sachin and Shalini. சச்சின் படமும், குஷி படமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். Heroine ku ego clash ஆகும், அது கடைசில காதலாவும் மாறும். இந்த படத்துல வர கண்மூடி திறக்கும்போது Songs lam இன்ன வரைக்கும் நிறைய பேரோட one of the favourites la கண்டிப்பா இருக்கும்.
வசீகரா

Fun and entertainment la கலக்கிட்டு இருந்த time அப்போ release ஆன movie தான் வசீகரா. என்னதான் இந்த படத்துல fun and comedy எல்லாம் இருந்தாலும் இந்த படம் success ஆனதுக்கு முக்கிய காரணம் பூபதி and பிரியா ஓட அந்த, love track தாங்க. அதுவும் அந்த, ஒரு வார்த்தை சொல்வாயா Song lam வந்த புதுசுல பயங்கரமான hit uhh nu தான் சொல்லியே ஆகணும். இந்த படத்துல விஜய் ஓட நக்கல் நையாண்டி கலந்த காதல் அந்த time la ஒரு புது trend set ah இருந்தது and எல்லாத்துக்கும் அது புடிச்சு இருந்தது.
அழகிய தமிழ் மகன்

மதுரைக்குப் போகாதடி… அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்… அப்படின்னு நமக்கு சொன்ன உடனே ஞாபகம் வரது, விஜயன் and ஸ்ரேயா தாங்க. ஒரு different ஆன story line la ஒரு beautiful ah na love track தான், குரு and அபிநயா. விஜய் ஓட energy ku match பண்ணி dance ஆடுறது கொஞ்சம் கஷ்டம் தான் அப்படின்றது நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்சது. But இந்த movie la match பண்ணி செமையா dance um ஆடி இருப்பாங்க ஸ்ரேயா. அதேசமயம் super ah vum நடிச்சிருப்பாங்க. அந்தக் கேளாமல் Song lam இப்ப பார்த்தா கூட அவங்க pair அவளோ super ah இருக்கும்.
துள்ளாத மனமும் துள்ளும்

விஜய் ஓட love subject movies la கண்டிப்பா நிறைய பேரோட most favourite movie la துள்ளாத மனமும் துள்ளும் படம் இருக்கும். படத்தோட ஆரம்பத்திலிருந்து விஜய், சிம்ரன் ah பயங்கரமா love பண்ணுவாங்க . Accidentally சிம்ரன் ஓட பார்வை போயிடும். சிம்ரனுக்கு பயங்கரமா help பண்ணுவாரு விஜய். அந்த உறவு நாளாக நாளாக காதலா மாறும். கடைசில சிம்ரனுக்கு கண் பார்வையும் வந்துரும். நம்மள நேர்ல பார்த்தா ஏத்துக்குவாங்கலோ ஏத்துக்க மாட்டாங்களோ அப்படின்னு குழப்பத்தோடு விஜய், சிம்ரன் ah பார்க்க வருவாங்க. கடைசியில இவங்கள ஒன்னு சேர்த்து வைக்கிறது “இன்னிசை பாடிவரும்” பாட்டு தாங்க. இந்த climax ah ஆயிரம் முறை பார்த்தாலும் கண்ணுல இருந்து கண்டிப்பா கண்ணீர் வரும். அந்த அளவுக்கு இவங்க 2 பேரோட pair பயங்கர impact பண்ணியிருக்கும்.
காதலுக்கு மரியாதை

விஜய் ஓட career ல ஒரு பெரிய turning point ah இருந்த ஒரு படம்தான் காதலுக்கு மரியாதை. என்னை தாலாட்ட வருவாளோ அப்படின்ற song la அவளோ emotions இருக்கும் விஜய் and ஷாலினி இடையில… “Love and love only”, அந்த love greeting எடுக்கிற scene laa அவ்ளோ அழகா எதார்த்தமா இருக்கும். Clean shave ஓட வர விஜய், இன்னொரு பக்கம் அவ்ளோ cute ah பயந்த சுபாபத்தோட வர ஷாலினி, இவங்க pair சும்மா செம cute ah இருந்ததுன்னு தான் சொல்லி ஆகணும்.
ஷாஜகான்
இந்த படம் பார்த்த எல்லாத்துக்குமே கண்டிப்பா தோணும், One side love ah இதைவிட best ah யாராலயும் சொல்ல முடியாது அப்படினு. அந்த time la வந்த ஒரு best one side love movie. ஏன் இந்த time la ume one of the best Vijay’s love movie la இது top la இருக்குனா இந்த படம் கொடுத்த impact அப்டி. இந்த படத்தை மட்டும் one side love பண்றவங்க புதுசா பாத்தாங்கன்னா அவங்க கண்ணுல இருந்து கண்ணீர் வராத யாராலயுமே தடுக்க முடியாது… அந்த அளவுக்கு heartbreaking climax ah இருக்கும். மின்னலைப் பிடித்து, மெல்லினமே இந்த songs lam இப்போ கேட்டாலும் அவளோ fresh ah இருக்கும். Songs மட்டும் இல்லைங்க அந்த படத்துல நடிச்ச விஜய் and ரிச்சா பலோட் ஓட on pair um தாங்க. பாக்குற எல்லார்னாலையுமே அந்த pain ah தாங்கிக்க முடியாது, எப்படி இவர் தாங்கினாரோ அப்படின்னு தான் நம்ம எல்லாருக்கும் தோணும்.