Thalapathy Vijay Police Movies: ஜன நாயகன் முதல் தெறி வரை: நடிகர் விஜய்-யின் போலீஸ் திரைப்படங்கள் – தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் போலீஸ் வேடங்களில் அவர் செய்த சில படங்கள் ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளன. ‘ஜன நாயகன்’, ‘தெறி’ ஆகிய சில படங்கள் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து அவரது கேரியரில் முக்கியமான திருப்பு முனையாக அமைந்துள்ளது.
போக்கிரி

போக்கிரி – 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம். இப்படம் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பிய படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் நடிகர் விஜய் திரைப்பயணத்தில் ஒரு பெரிய மைல்கல் படமாக அமைந்து கொண்டாடப்பட்டது. இப்படத்தின் திரைக்கதை மற்றும் நகைச்சுவை காட்சிகள் இன்றும் பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
ஜில்லா

ஜில்லா – 2014 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் படமாக வெளியான விஜய்யின் ஜில்லா திரைப்படம், இவரின் ஹிட் பட வரிசையில் இணைந்து பிரபலமானது. இப்படத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக இப்படம் வெளியாகி கொண்டாடப்பட்டது.
தெறி

தெறி – 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் விஜய், சமந்தா என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க, நடிகர் விஜய் ‘விஜய குமார்’ என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படமானது நடிகர் விஜய் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. காதல், ஆக்ஷன், எமோஷன் என இப்படத்தில் நடிகர் விஜய் அனைத்து துறைகளிலும் மாஸ் காட்டியிருப்பார்.
ஜன நாயகன்

ஜன நாயகன் – இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படம் 2026 பொங்கல் பண்டிகைக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்-யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என இப்படத்தின் சமீபத்திய டீஸர் வெளியீட்டில் உறுதி செய்துள்ளது, படக்குழு.