பொதுவா இசையமைப்பாளர்கள் இசை அமைப்பாளர்களாக அறிமுகம் ஆகி, பின்னாடி நடிகர்கள் ஆகிறது வழக்கம். உதாரணமா ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆண்டணி இவர்களை சொல்லலாம். ஆனா ஒருத்தர் நடிகரா அறிமுகமாகி பின்னாடி பெரிய இசையமைப்பாளரா மாறி இருக்காருன்னா அது நம்ம தமன் தான்.
பாய்ஸ் படத்தில நான்கு ஹீரோல ஒருத்தரா கிருஷ்ணா அப்பிடிங்கிற கதாப்பாத்திரம் மூலமா அறிமுகமாகி, அதுக்கப்பறம் இசையமைப்பாளர் ஆனாரு. நிறைய பேருக்கு பாய்ஸ் படத்தில் தமன் நடிகரா அறிமுகமானாருங்கிற விஷயமே ஆச்சரியமா இருக்கும்.

அதுக்கப்பறமும் அவரு சில படங்களல நடிக்கவும் செஞ்சாரு. ஆனா அவரு தெலுங்குல நிறைய படங்கள் இசையமைச்சு அது ஹிட் ஆகி தமிழுக்கு வந்து இங்கையும் கலக்கி இருக்காரு. இதுவரைக்கும் தெலுங்குல மட்டும் 85 படங்களுக்கு மேல இசையமைச்சு இருக்காரு.
தமிழ்ல 30 படங்களுக்கு மேல் இசையமைச்சு இருக்காரு. ரொம்ப எதார்த்தமான இசையமைப்பாளர். அனைவரிடமும் இயல்பா பழக்கக்கூடியவர். இவரோட பணியாற்றக் கூடிய எல்லாரும் இவரோட சீக்கிரமே நண்பர்களாயிருவாங்க.
சமீபத்தில அவரோட இசையில வெளியான ஈஸ்வரன் படப் பாடல்கள் நல்ல ஹிட் அடிச்சது. இப்ப தொடர்ந்து நிறைய படங்கள் இசையமைச்சிட்டு இருக்க தமன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களை ஒஸ்தி, தடையற தாக்க படங்களில் பாட வைத்து ஹிட் கொடுத்தார்.
தமன் தமிழ்-ல இசைத்த Album-கள் அத்தனையும் தாறுமாறு என்று சொல்லலாம்.
இசையமைப்பாளர் தமன் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by RJ Priya