Cinema News Stories Trending

வரான் வரான் இந்த தமிழன் !! – STR

சிம்புவின் அதிரடியான Comeback-க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தனது தொடர்ச்சியான Update-களால் ஆனந்த அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் “தமிழன் பாட்டு” வெளியாகியுள்ளது.

ஈஸ்வரன் திரைப்படத்தின் டீஸரிலேயே இந்த பாட்டின் சில வரிகள் இடம்பெற்றிருக்கும். S.தமன் இசையில் அனந்து மற்றும் தீபக் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இப்பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே இணையத்தில் வேற லெவல் வைரலாகியுள்ளது. பாடலாசிரியர் யுகபாரதி தமிழை பற்றியும், தமிழன் பற்றியும், சிம்புவின் மாஸ் பற்றியும் புட்டு புட்டு வரிகளை பொறித்து வைத்துள்ளார்.

இப்பாடலில் ” வர்றான் வர்றான் இந்த தமிழன், வரலாற்றை திருப்பி எழுதும் தலைவன் ” என்ற வரிகள் சிம்புவுக்காகவும், சிம்புவைப் பற்றி அவரது ரசிகர்களுக்கு எடுத்து சொல்லும் விதத்திலும் அமைந்திருப்பது போல தெரிகிறது. இப்பாடலை கேட்கும் ஒவ்வொரு சிம்பு ரசிகனுக்கும் Goosebumps (புல்லரிப்பு) ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இப்பாடலில் ” உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு, உசுரையும் கொடுக்குற உறவிருக்கு ” என ஒரு வரியில் தமிழையும், தமிழனையும் யுகபாரதி பெருமைப்படுத்தி எழுதியிருக்கிறார். இப்பாடலின் வெளியீடு குறித்த Update நேற்றே ( dec 13 ) வெளிவந்தது. அந்த Update வெளிவந்த சில நிமிடங்களில் இருந்தே #Eeswaran என்ற tag சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக தொடங்கிவிட்டது.

நீண்ட இடைவெளிக்கு பின் சமூக வலைதங்களில் comeback கொடுத்த சிம்பு தொடர்ந்து ரசிகிரகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் தன் புகைப்படங்களையும், பட Update-களையும் வாரி வழங்கியிருக்கிறார். ஈஸ்வரன் திரைப்படத்தின் மீது ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பு இந்த பாடலால் மேலும் ஒரு Level கூடி வேற Level-ல் எகுறியுள்ளது.

ஈஸ்வரன் திரைப்படத்தில் பாரதி ராஜா, நிதி அகர்வால், பால சரவணன், நந்திதா ஆகியோர் சிம்புவுடன் இணைந்து நடிக்கின்றனர். இப்படம் குடும்பங்களுக்கான திரைப்படமாக உருவாகியிருக்கும் என இப்படத்தின் டீஸர்-ஐ வைத்து பார்க்கும் போது தெரிகிறது. ” சிம்புவை Screen-ல் காண சில நாட்களே உள்ளது ” என சொல்லலாம். ஏனெனில் இப்படம் 2021-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்வரன் திரைப்படம் சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகிறோம். ” தமிழன் பாட்டு ” -வின் lyric வீடியோவை கீழே காணுங்கள்.

About the author

alex lew