சுப நாட்களில் நம் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் என்பது மிகவும் மிக்கியமான ஒன்றாக இருக்கும். அது ஆன்மிக ரீதியான ஒன்று என்று நாம் நினைத்திருப்போம் ஆனால் அதில் சில அறிவியல் சார்ந்த பயன்களும் உள்ளது என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.
மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மாஇலைகளிலும் அதன் சக்தி குறையாது. மாவிலை’ கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும். புது வீடு கட்டி, கிரகப்பிரவேஷம் வைக்கும் போது அல்லது திருமணம் போன்ற ஏதாவது நடந்தால், பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது மட்டுமே இன்றைய கால கட்டத்தில் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.
நாம் வசிக்கும் வீட்டில் மின் காந்த அலை என்பது இருந்து கொண்டே இருக்கும். இது நல்ல விஷயங்களை மட்டுமல்ல, தீய விஷயங்களையும் ஈர்க்கக் கூடியவை. இவைகள் வீட்டிற்குள் வராமல் இருக்க நம்மால் தடை போட முடியாது. அப்படி போட்டால் வீட்டிற்குள் வர வேண்டிய நல்ல சக்திகளும் வராமல் தடைபட்டு நின்று விடும். இதனால் வீட்டிற்கு வெளியிலும், வீட்டிற்குள்ளும் இருக்கும் கெட்ட சக்திகளை நீக்கி, நல்ல சக்திகளை தக்க வைக்கும் வடிகட்டியாக மாவிலைகள் செயல்படுகின்றன .வீட்டிற்கு உயிர் சக்தியாக விளங்கக் கூடியது நிலைவாசல் தான். அதனால் தான் நிலை வாசலில் மாவிலை தோரணம் அவசியம் கட்ட வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்தனர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அது காய்ந்த பிறகு அல்லது அடுத்த வெள்ளிக்கிழமை அதை அகற்றி விட்டு, வேறு இலைகளைக் கொண்டு தோரணம் கட்ட வேண்டும். 9 அல்லது 27 என்ற எண்ணிக்கையிலேயே மாவிலைகளை பயன்படுத்தி தோரணம் கட்ட வேண்டும். காய்ந்த மாவிலைகளை நீர்நிலைகளில் விட்டு விடலாம் அல்லது கால்படாத இடங்களில் போட்டு விடலாம் .மாவிலையை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கட்டுவது மிகவும் விசேஷமானதாகும். காலை 4 முதல் 05.30 வரையிலான பிரம்ம முகூர்த்த வேளையில் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, வீட்டில் உள்ள கஷ்டங்கள், பிரச்சனைகள் நீங்க வேண்டும், லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டும் என வேண்டிக் கொண்டு மாவிலையை கட்டும் போது அந்த வேண்டுதல் அப்படியே நிறைவேறும்.
திரியில் சிறந்த திரி எது ?
நாம் அன்றாடம் வீடுகளிலும், கோயிலுக்கு சென்றாலும் விளக்கேற்றுதல் ஒரு தெய்வீக தருணம். அப்படி தெய்வீக காரணங்களுக்காக நாம் ஏற்றும் விளக்கில் நாம் பயன்படுத்தும் திரியின் பயன்கள்
பஞ்சுத்திரி – சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
தாமரைத் தண்டு திரி – முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
வாழைத்தண்டு திரி – மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். தாமரை தண்டு திரியால் விளக்கேற்றும் போது வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் பெருக்கி, அடைக்க முடியாத கடன்களை அடைத்து, இழந்ததை மீட்டெடுக்க முடியும். முன்னோர்களின் ஆசிா்வாதம் முழுமையாக பெற்று வாழ்வில் சகல சவ்பாக்கியங்களை அள்ளி தரும்.
சிவப்பு திரி – சிவப்பு திரியை கொண்டு விளக்கேற்றும் போது தடைபெற்ற திருமணங்கள், செவ்வாய் தோஷம், நீங்கி முருகப்பெருமானின் அருளால் பலவருடம் குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் ஏற்பட்டு உங்கள் செல்வாக்கு உயரும்.
மஞ்சள் துணி திரி -மஞ்சள் துணி திரியால் தீபம் ஏற்றும்போது, எத்தனை துன்பங்கள் வந்தாலும் சமாளிக்கும் மன தைரியமும், பினி பிடைகள் நீங்கி அம்பாளின் பரிபுரண கருணையும் அருளும் கிடைத்திடும்.
பச்சை நிற திரி – செல்வம் பெருகும் கடன் குறையும் மதிப்பில் கூடும்
வெள்ளை திரி -வெள்ளை துணி திரியில் விளக்கேற்றும்போது நாம் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சரியானதாக இருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும், அமைதியான மனநிலையை ஏற்படுத்துவதோடு, சமாதானமும் மனநிறைவும் ஏற்படும்.
Article By – Rj Viji, Salem