வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், நிறை மாத கர்ப்பமாய் இருப்பவர்கள் கோயிலுக்கு வர முடியாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கோயிலில் உற்சவர் சிலையை வைத்தார்கள். விழா காலத்தில் அந்த சிலைகளை வீதி உலா வர வைத்தார்கள்.
உற்சவர் சிலை செப்பு விக்கிரகமாக தாமிரத்தில் ஏன் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு கிருபானந்த வாரியார் சுவாமிகள் நமக்கு இப்படி சொல்லி இருக்கிறார்கள், ” வீட்டில் இருக்கக்கூடிய எல்லா கருவிகளும் இயங்குகிறது.அதற்குத் தேவையான மின்சாரத்தை ஒயர் மூலம் கம்பி வழியாக வீட்டுக்கு கொண்டு வருகிறோம்.
ஒயருக்குள் செம்புக் கம்பி இருக்கும். அதுபோல மந்திர சக்தியால் உயிரோட்ட பட்ட உற்சவமூர்த்தியிலிருந்து நாமும் ஆற்றலை சக்தியைப் பெற வேண்டும் என்பதற்காக செம்பிலே வடிவமைத்தனர்.
இந்தச் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பால் போன்ற பொருட்களை சாப்பிட்டாலும் நமக்கு சக்தி கிடைக்கும். உற்சவர் சிலைக்கே இவ்வளவு சக்தி என்றால், கோயிலுக்குள் சென்றால் எத்தனையோ செம்புச் சிலைகளைக் காணக்கூடிய பாக்கியம் நமக்குண்டு. அவற்றை வணங்குகிறபோது அவ்வாறு ஆற்றல் பிறக்கும்.
அதனால்தான் தினமும் கோவிலுக்கு போய் நல்ல மனதுடன் களங்கமற்ற பக்தி செலுத்தும் போது அவர்களின் திறமை அதிகமாகி எல்லாத் துறையிலும் மிளிர்கிறார்கள். “
Article By – “சூர்யோதயம் ” என். செல்வராஜ், கோவை.

