தமிழில் இந்த வார (ஜூலை 11, 2025) ரிலீஸாகும் புது படங்கள் லிஸ்ட்.. – இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் இந்த வாரம் தமிழில் ரிலீஸாகும் திரைப்படங்களின் முழு லிஸ்ட் & தகவல்கள் முழுவதும் விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஹாலிவுட் திரைப்படம் சூப்பர்மேன் முதல் விமல் நடித்திருக்கும் தேசிங்குராஜா 2 திரைப்படம் வரை பல படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. முழு லிஸ்ட் இதோ.
தேசிங்கு ராஜா 2
துள்ளாத மனமும் துள்ளும் திரைப்பட புகழ் இயக்குனர் எழில் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள பார்ட் 2 திரைப்படம், தேசிங்கு ராஜா 2. இந்த படத்தில் விமல், புகழ், ஜன நாதன், பூஜிதா என பல பிரபலங்கள் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகியுள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படம் 2025 ஜூலை 11ல் வெளியாகியுள்ளது.

Mrs & Mr
Mrs & Mr, வனிதா விஜயகுமார் தானே இயக்குனராகவும், நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள திரைப்படம். இப்படத்தில் ஷகீலா, ஆர்த்தி, ராபர்ட் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஓஹோ எந்தன் பேபி
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஷ்ணு விஷால்-ன் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமாகும் காதல் திரைப்படம். இப்படத்தில் மிதிலா பால்கர், அஞ்சு குரியன், விஷ்ணு விஷால் என பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் 2025 ஜூலை 11ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தினை புதுமுக இயக்குனர் க்ரிஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.

சூப்பர்மேன்
சூப்பர்மேன், இயக்குனர் ஜெம்ஸ் கன் இயக்கத்தில் 2025 ஜூலை 11ல் உலகமெங்கும் பல மொழியில் டப்பிங் மூலம் வெளியாகியுள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம்.


