Cinema News Stories

தமிழில் இந்த வாரம் (ஜூலை 25, 2025) ரிலீஸாகும் புது படங்கள் லிஸ்ட்..

this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more
this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more

தமிழில் இந்த வாரம் (ஜூலை 25, 2025) ரிலீஸாகும் புது படங்கள் லிஸ்ட்.. – இந்த வாரம் 2025 ஜூலை 25ல் தமிழ் சினிமாவில் தமிழில் ரிலீஸாகும் புது திரைப்படங்களின் முழு பட்டியல் இங்கு விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி, பிரபல ஹாலிவுட் திரைப்படமான பென்டாஸ்டிக் போர் என பல திரைப்படங்கள் இங்கு உள்ளன. முழு லிஸ்ட் இதோ.

தலைவன் தலைவி

தலைவன் தலைவி – ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி & நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து 2025 ஜூலை 25ல் திரையரங்கில் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ரோஷ்ணி ஹரிப்ரியன், ஆர் கே சுரேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீஸாகி பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more
this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more

பென்டாஸ்டிக் போர்

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் 2025ல் வெளியாகி உள்ள பிரமாண்ட திரைப்படம், பென்டாஸ்டிக் போர். இப்படமானது அவென்ஜர்ஸ் திரைப்பட பட்டியலில் இடம்பெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பென்டாஸ்டிக் போர் திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ படமாக வெளியாகி குழந்தைகள் முதல் இளசுகள் வரை பலரை கவர்ந்து பிரபலமாகி உள்ளது.

this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more
this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more

மாரீசன்

மாரீசன், பிரபல மலையாள சினிமா நடிகர் பகத் பாசில் மற்றும் ‘வைகை புயல்’ வடிவேலு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் 2025 ஜூலை 25ல் வெளியாகி பல மத்தியில் பிரபலமாக உள்ளது. இப்படம் விமர்சனம் ரீதியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more
this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more

ஹரி ஹர வீர மல்லு

ஹரி ஹர வீர மல்லு – இயக்குனர் க்ரிஷ் ஜோதி கிருஷ்ணன் இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலாற்று கதையம்சம் கொண்ட அதிரடி திரைப்படம். நேரடி தெலுங்கு திரைப்படமாக வெளியாகியுள்ள இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், வசூல் மற்றும் விமர்சனத்தில் இப்படம் கலவையான ரிசல்ட் பெற்று தற்போது திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more
this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more

மகாவதார நரசிம்மா

மகாவதார நரசிம்மா – இந்தியாவில் உள்ள லட்ச புராணக்கதைகளில் ஒன்றான நரசிம்மர் கதையை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் முற்றிலும் ஒரு அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கி வெளியிட்டுள்ளனர், படக்குழுவினர். இப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி என பல மொழியில் உருவாகி ஒரு பான் இந்தியா படமாக வெளியாகி உள்ளது.

this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more
this-week-july-25-2025-new-releases-in-tamil-fantastic-four-thalaivan-thalaivi-and-more

Article By Sakthi Harinath

About the author

Sakthi Harinath