தமிழில் இந்த வார (ஜூலை 4, 2025) ரிலீஸாகும் புது படங்கள் என்னென்ன தெரியுமா? – முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் ஜூலை 4, 2025ல் தமிழ் திரையரங்கில் தமிழில் வெளியான புது படங்களின் முழு லிஸ்ட் & தகவல்கள் பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம். இதில் சரத்குமார், தேவையானி நடித்திருக்கும் 3 BHK திரைப்படம் முதல் பறந்து போ, பியூனிக்ஸ் என பல படங்கள் உள்ளது. இதோ.
3 BHK
3 BHK – இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் என பல தமிழ் திரைப்பட பிரபலங்கள் நடித்திருக்கும் அழகான குடும்ப திரைப்படம். ஒரு மிடில் கிளாஸ் பேமிலி எப்படி தங்களின் சொந்த வீடு வாங்கும் கனவை நிஜமாக்குகிறது, என்பதே இப்படத்தின் கதைக்கரு. எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் திரைக்கு வரவிருக்கும் இப்படம், இப்படத்தின் ட்ரெய்லர் மூலம் பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.

பறந்து போ
பறந்து போ – சென்னை 28 புகழ் நடிகர் சிவா & அஞ்சலி முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ராம் இயக்க, 2025 ஜூலை 4ல் இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

பியூனிக்ஸ்
பியூனிக்ஸ் – தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை பிரபல சண்டை மாஸ்டர் அனல் அரசு இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் 2025 ஜூலை 4ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படம் பாக்சிங் ஸ்போர்ட்ஸ் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

ஜுராசிக் வேர்ல்ட் : ரீ பிரத்
ஜுராசிக் வேர்ல்ட் : ரீ பிரத் – தென்னிந்திய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம். இப்படத்திற்கு உலகளவில் பல ரசிகர்கள் உள்ளனர். பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் இந்த படம் தமிழ் மொழியிலும் ஜூலை 4ல் வெளியாகி உள்ளது.

அஃகேனம்
அஃகேனம் – இயக்குனர் உதய் கே இயக்க, அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை 2025 ஜூலை 4ல் திரையரங்கில் வெளியிட்டுள்ளனர், படக்குழுவினர்.


