ஜெய் பீம் முதல் மனிதன்: நீதிமன்றம் சார்ந்த 5 பெஸ்ட் தமிழ் படங்கள் லிஸ்ட் – இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு பெரிய அளவில் பிரபலமான 5 பெஸ்ட் நீதிமன்ற திரைப்படங்களின் பாடியல் உள்ளது. இதில் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் முதல் உதயநிதி ஸ்டாலின்-ன் மனிதன் திரைப்படம் வரை ரசிகர்களை இறுதி காட்சிவரை இருக்கை நுனியில் அமர்த்திய சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.
ஜெய் பீம்
ஜெய் பீம் – சூர்யா, மணிகண்டன், லிஜிமோல், ரமேஷ் ராவ், குரு சோமசுந்தரம் என தமிழ் சினிமா முக்கிய நடிகர்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் டி ஜே ஞானவேல் ராஜா இயக்கியுள்ளார். இப்படம் லாக்டவுன் காலகட்டத்தில் நேரடி ஓடிடி திரைப்படமாக வெளியாகி மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்ட திரைப்படமாகும். எமோஷன் காட்சிகள் தொடங்கி இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு இப்படம் இந்திய திரைத்துறையில் பல விருதுகளை வென்று குவித்துள்ளது. மேலும் ஜெய் பீம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு உருவான படமாகும்.

மனிதன்
உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹன்சிகா, ராதா ரவி, பிரகாஷ் ராஜ் என தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம், மனிதன். இப்படம் விமர்சன ரீதியில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படமாகும். ஜனரஞ்சகமான படமாக உருவாகி தமிழ் ரசிகர்களின் மனதை வென்று தவிர்க்க முடியாத வெற்றி படைத்துள்ள மனிதன் படம், இன்றும் பல திரைப்படங்கள் வரிசையில் தனித்துவத்துடன் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

நேர்கொண்ட பார்வை
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி பிரமாண்ட ஹிட் அடித்த திரைப்படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் படமாகும், நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் முழுக்கு அழுத்தமான வசனங்களால் நீதிமன்றத்தில் நடக்கக்கூடிய கதைக்களத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு பெற்றது. இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட வெற்றி படமாகும்.

எல்லாம் அவன் செயல்
எல்லாம் அவன் செயல் – 2008 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் சஸ்பென்ஸ் திரில்லர் கிரைம் திரைப்படம். இப்படம் தமிழ் சினிமாவில் விமர்சனம் ரீதியில் பெரிய அளவில் பேசப்பட்ட படமாகும். இப்படத்தில் ராதாகிருஷ்ணன், பாவா லக்ஷ்மணன், மணிவண்ணன் என பலர் நடித்துள்ளனர்.

பொன்மகள் வந்தால்
பொன்மகள் வந்தால் – ஜோதிகா, பாக்கியராஜ் என தமிழ் திரைப்பட பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் தமிழ் சினிமாவில் லாக்டவுன் காலகட்டத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸான திரைப்படம்.
