சமூக வலைதளங்களில் புதுப்புது சாதனைகளை தினமும் உருவாக்குவதில் தல தளபதி ரசிகர்களை மிஞ்ச முடியாது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டின் பாதி வரை அதிக அளவில் உபயோகப்படுத்தப்பட்ட ட்விட்டர் tag-களில் #valimai மற்றும் #Master tag-கள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இந்தியாவிலேயே அதிகம் உபயோகிக்கப்பட்ட ட்விட்டர் tag-களின் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பெரும்பாலும் திரைப்படங்கள் சம்பந்தப்பட்ட Tag-களே இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து #valimai முதலிடத்தையும் #Master இரண்டாம் இடத்தையும் #AjithKumar நான்காம் இடத்தையும் #Thalapathy65 ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது. டாப் 10 tag-களில் நான்கு tag-களில் தல தளபதி சம்பந்தப்பட்ட tag-களாக அமைந்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்திடமிருந்து இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே தல மற்றும் தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வலிமை திரைப்படத்திற்காக காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு #valimai முதலிடம் பிடித்தது ஒரு ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்கிறது.
- Nivaashiyni – Latest HD Images & Photos Gallery
- கோவிலின் நுழைவாயில் உள்ள அர்த்தங்கள்
- பூரணத்துவம் தரும் பூஜைகள் | Poojas that bring Perfection
- Mamitha Baiju Stunning New Photos Go Viral: ‘Dude’ Actress Wins Hearts
- மங்களம் அருளிடும் மாவிலை தோரணம்
சந்தோஷத்தில் சமூக வலைத்தளங்களை தெறிக்கவிடும் தல ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியாய் வலிமை படத்தின் “நாங்க வேற மாரி” பாடலின் lyric video 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த இரண்டு விஷயங்களும் தல ரசிகர்களுக்கு செம Treat-களாக அமைந்துள்ளது.
ட்விட்டர் இந்தியா வெளியிட்ட Top tag-கள் பட்டியல் அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

