தளபதி விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. இந்த சாதனையை தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. படம் மட்டுமின்றி இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அனிருத்தின் அதிரடியான இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் இன்றுவரை பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் வலம் வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் தமிழ் சினிமா ரசிகர்களையும் தாண்டி உலக இசை ரசிகர்களை கவர்ந்த ஒரு மெகா ஹிட் பாடலாக அமைந்தது. தற்போது வரை பல திரையுலக பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திரையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தளபதி விஜய் ஆடும் வெறித்தனமான நடனத்தை கண்டு தங்களை மறந்து தங்களது நாடி நரம்புகளால் ரசிகர்கள் நடனம் ஆடினர் என்றே கூறலாம். ஏற்கனவே இப்பாடலின் லிரிக் விடியோ வெளிவந்து 130 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயின் பிறந்தநாள் வரவிருக்கும் இவ்வேளையில், வாத்தி கம்மிங் வீடியோவின் 200 மில்லியன் சாதனை ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜயின் பிறந்தநாள் வாத்தி கம்மிங் பாடலின் இந்த சாதனைக்காக இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும், மாஸ்டர் திரைப்படக் குழுவினருக்கும் சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வாத்தி கம்மிங் பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.