Stories Trending

உலகளவில் வைரலாகும் வாத்தி கமிங் !!!

தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. உள்ளூர், உள்நாடு மட்டுமின்றி உலக அளவில் இப்பாடல் கேட்கும் அனைவரையும் துள்ளாட்டம் போட வைத்து வருகிறது.

அந்த வகையில் பிரபல ஆங்கில கலை மற்றும் அசோசியேட் இயக்குனரான ஆடம் மோர்லே அவர்கள் வாத்தி கம்மிங் பாடலை தான் மிகவும் விரும்புவதாகவும், தளபதி விஜயின் உழைப்பை பாராட்டியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இப்பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்கள் பலரும் இப்பதிவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஆடம் மோர்லேயின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இது மட்டுமின்றி பிரபல சர்வதேச கால்பந்து கிளப் ஒன்றின் ட்விட்டர் பக்கத்தில் கால் பந்தாட்டத்தின் புதிய சீசனை வரவேற்கும் விதத்தில் வாத்தி கம்மிங் எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். இப்பதிவை மாஸ்டர் திரைப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார். அனிருத் ரீட்வீட் செய்த பதிவை கீழே காணுங்கள்.

இந்த இரு பதிவுகளுமே வாத்தி கம்மிங் பாடல் உலக அளவில் அனைவராலும் கொண்டாடப்படுகிறது என்பதை உறுதி செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே மாஸ்டர் திரைப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி தளபதி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

About the author

alex lew