“இது கனவா இல்லை நிஜமா !!!” என்ற ஆச்சரியத்தை போனி கபூரின் ட்விட்டர் பதிவு தல அஜித் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்கள் காத்திருந்ததற்கு விருந்தாக வலிமை திரைப்படத்தின் First Look குறித்த Update வெளியாகியுள்ளது.
வலிமை திரைப்படத்தின் பூஜை Update-ஐ தொடர்ந்து எந்த ஒரு update-ம் வருடக் கணக்கில் வெளியாகாமல் இருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் தல ரசிகர்கள் படக்குழுவினரிடம் தினமும் Update குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.

“இப்படியே போயிக்கிட்டு இருந்தா என்னப்பா அர்த்தம், இந்த Waiting-க்கு ஒரு End-ஏ கிடையாதா ???” என மனக்குமுறலில் இருந்த தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் 50-வது பிறந்தநாள் Special ஆக வலிமை படத்தின் First Look வருகிற May 1-ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி படத்தின் promotion-ம் தொடர்ந்து நடைபெறும் என அவர் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போனியின் Tweet-ஐ கண்ட நொடியில் இருந்து, “Waiting-லேயே வெறி ஏறுதே” என்ற Mood-க்கு தல ரசிகர்கள் வந்துவிட்டனர். தல அஜித்தின் ரசிகர்கள் மட்டுமின்றி மொத்த கோலிவுட் வட்டாரமும் வலிமை First Look-ற்கு “I’m Waiting” என சமூக வலைத்தளங்கள் மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே போனி கபூர் தயாரித்து H.வினோத் தல அஜித்தை வைத்து இயக்கிய “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகாஹிட் படமாக அமைந்தது. இதே கூட்டணி மீண்டும் இணைவதால் “வலிமை” திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
வலிமை அப்டேட் குறித்த போனி கபூரின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.