Teaser/Trailer Videos

விஷாலின் சக்ரா!!!

அறிமுக இயக்குனர் M.S. ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவரவிருக்கும் சக்ரா திரைப்படத்தின் ட்ரைலரின் ஒரு சிறிய பகுதி (Glimpse of trailer ) இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

34 நொடிகள் மட்டுமே இருக்கக்கூடிய இந்த ட்ரைலர் விறுவிறுப்பாக இருப்பதோடு சேர்த்து படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த ட்ரைலரை வைத்து பார்க்கும் போது சக்ரா திரைப்படம் சைபர் ஹேக்கிங் பற்றிய கதையை உள்ளடக்கியிருக்கும் என தெரிகிறது.

இப்படத்தில் விஷாலுடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா காசென்ட்றா, ரோபோ ஷங்கர், ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா, மனோபாலா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் சண்டை காட்சிகளை அனல் அரசு வடிவமைக்கிறார். 

இப்படத்தின் பாடல்களை யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். யுவனின் பின்னணி இசை இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Glimpse of Trailer வெளியாகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் யூடியூபில் #1 ட்ரெண்டிங்கில் வந்துவிட்டது.

சக்ரா திரைப்படத்தின் Glimpse of  Trailer-ஐ கீழே காணுங்கள். 

About the author

Santhosh

Suryan FM Twitter Feed

Suryan Podcast