வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை பார்ட் 1’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் மாபெரும் வெற்றி பெற்றது. ‘விடுதலை பார்ட் 1’ வெற்றிக்கு பிறகு ரசிகர்களிடம் ‘விடுதலை பார்ட் 2’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
‘விடுதலை பார்ட் 1’ கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்த சூரி கதாபாத்திரத்தை மையமாக வைத்து கதை நகர்ந்ததை தொடர்ந்து ‘விடுதலை பார்ட் 2’ விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் பெருமாள் வாத்தியார், மக்கள் படைத் தலைவர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அக்டோபரில் ‘விடுதலை பார்ட் 2’ படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடியாத காரணத்தால் 2024 ஜனவரியில் படத்தை வெளியிடுவதாக தகவல் வெளிவந்தது. ஆனால் இப்போது, படம் 2024 கோடையில் தான் திரைக்கு வரும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் பாத்திரம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாளும் அவருடைய பாகங்களை நீண்ட ஒரே Schedule-ல் படமாக்க காத்திருப்பதுமே இந்த தாமதத்திற்கு காரணமாம். அதுமட்டுமின்றி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், அட்டகத்தி தினேஷ் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

‘விடுதலை பார்ட் 1’ ரசிகர்கள் மத்தியில் எந்த அளவு தாக்கம் தந்ததோ அதில் சிறிது கூட குறையாத தாக்கத்தை மீண்டும் ஏற்படுத்த ‘விடுதலை பார்ட் 2’-ஐ செதுக்கிக் கொண்டிருக்கிறார வெற்றிமாறன்.
அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடும் பெருமாள் வாத்தியாரின் அடுத்தகட்ட நகர்வுகளையும், வேலை பார்க்கும் இடத்தில் தகுந்த மரியாதை கிடைக்காத கான்ஸ்டபிள் குமரேசன் எடுக்கப் போகும் முடிவுகளையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.