Vijay Sethupathi – Serial la start ஆன இவரோட travel இன்னைக்கு தலைவர்,உலகநாயகன்,விஜய் னு முன்னணி நடிகர்களோட வில்லனா நடிக்குற வரைக்கும் மாத்தி இருக்கு…vijay சேதுபதி படம்னா நம்பி போகலாம் minimum gurantee னு theatre க்கு மக்கள் போறதுனால தான் இவர் மக்கள் செல்வனா இருக்காரு.
விஜய் சேதுபதின்னா, just “ஹீரோ”ன்னு மட்டும் சொல்ல முடியாது. அவர் படங்களைப் பார்த்தா, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வாழ்க்கையோட சேர்த்து சொல்லுற நடிகர் என்பதே புரியும். அதனாலே அவரோட சில முக்கிய படங்களை எடுத்துக்கிட்டு, சாதாரண பேச்சு வழக்குல சொல்றேன்.
முதல்ல Pizza
இந்த படத்துல விஜய் சேதுபதி ஒரு சாதாரண பையன். பெரிய வீரன் இல்ல, பயப்படுறான், பேய் இருக்கா இல்லையா என்ற சந்தேகம், காதலி மேல இருக்குற அன்பு, திடீர்னு மாட்டிக்கிற பிரச்சினை – எல்லாத்துக்கும் அவன் ரியாக்ஷன் ரொம்ப இயல்பா இருக்கும். “நடிப்பு”ன்னு சுத்தமா தெரியாது. நம்மல மாதிரி ஒரு ஆள் அந்த சூழ்நிலையில சிக்கினா எப்படி இருப்பானோ, அதே மாதிரி இருப்பாரு.. அப்போதான் மக்கள் “இவன் நம்ம மாதிரி தான்”ன்னு connect ஆனாங்க.
அடுத்தது Soodhu Kavvum
இதுல அவர் kidnapper. ஆனா சாதாரண சினிமா வில்லன் மாதிரி இல்ல. பேசுற விதம், சிரிப்பு, யோசிக்கிற முறை – எல்லாமே கொஞ்சம் வித்தியாசம். தப்பான வேலையை செய்றவரா இருந்தாலும், அவரைப் பார்த்தா கோபம் வராது; சிரிப்பு தான் வரும். “இவன் கெட்டவனா, நல்லவனா?”ன்னு நம்மையே யோசிக்க வைப்பார். இது தான் விஜய் சேதுபதியோட special – negative role கூட பாக்க அவ்ளோ cute ah இருக்கும்..
அப்பறோம் தர்மதுரை
இந்த படம் ரொம்ப அமைதியா மனசுக்குள்ள போய் அடிக்கும். ஒரு டாக்டர்… வாழ்க்கை முழுக்க சிதறிப் போய், குடிப்பழக்கத்துல மூழ்கி, நம்பிக்கையே இல்லாம இருக்குற மனிதன். பெரிய டயலாக் கிடையாது. கண், முகபாவனை, அமைதி – இதுலேயே எல்லாம் சொல்லுவார். இந்த படத்தைப் பார்த்துட்டு, “இப்படி உடைந்த ஒரு மனிதன் திரும்ப நிமிர முடியுமா?”ன்னு நம்மலே கேள்வி கேட்போம். அந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமா அவர் நடிப்புல கொண்டு வருவார்.
அதுக்கப்புறம் Vikram Vedha
இதுல வேதா என்ற கதாபாத்திரம். கெட்டவனா நல்லவனா என்ற கேள்விக்கு நேரடியான பதில் இருக்காது. ஒவ்வொரு கதையும் சொல்லும்போது, “சரி-தப்பு”ன்னு நம்ம நினைச்ச விஷயமே குழம்பும். பேசுற விதம் சாதாரணமா இருக்கும், ஆனா அவர் சொல்ற கதைகள் ரொம்ப ஆழமா போய் நம்ம மனசுல சிக்கிடும். இந்த படத்துக்கப்புறம், “விஜய் சேதுபதி ஒரு நடிகர் இல்ல… ஒரு thinker”ன்னு நிறைய பேர் சொன்னாங்க.
இந்த எல்லா படங்களையும் சேர்த்து பார்த்தா ஒரு விஷயம் தெளிவா தெரியும். அவர் ஒரே மாதிரி ஹீரோவா இருக்க மாட்டார். ஒவ்வொரு படத்துலயும் வேறொரு மனிதனா மாறிடுவார். அதுவும் பெரிய அலங்காரம், பில்ட்அப் இல்லாம, சாதாரண மனிதன் பேசுற மாதிரி, நடக்குற மாதிரி. அதனால்தான் அவரோட கதாபாத்திரங்கள் படம் முடிஞ்சதுக்கப்புறமும் நம்ம மனசுலயே தங்கிடுது.இப்டி விக்ரம் la வர சந்தானம் opening scene eh auto கவிழ்ந்து தொப்பையோட shirt இல்லாம cooling glass la oru கண்ணாடி உடைஞ்சி எந்திரிச்சி பின்னாடி கைகட்டி நடந்து வரும் போது theatre la claps சத்தம் காது கிழியும்…villan னாலே ஒரு வெறுக்குற feel ஓட பாத்த காலம் போய் swag ah மக்கள பாக்க வெச்ச பெருமை விஜய் சேதுபதிக்கு உண்டு..அதுலயும் தகப்பனா மகாராஜா படத்துல தன்னோட acring மூலமா எல்லாரையும் கலங்கிகடிச்சிருப்பாரு மனுஷன்..இவரோட எதார்த்தமான பேச்சுக்கே பல லட்சம் fans இருக்காங்க..அதுவும் மாவீரன் படத்துல வெறும் voice over கொடுத்தே mass காட்டிருப்பாரு..இப்டி oh my கடவுளே,இமைக்கா நொடிகள்,nu guest role லையும் கலக்கிருப்பாரு…அதுலயும் comedy ல பிச்சி கட்டுன ஒரு படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..குமுதா அப்டினு இவர் கூப்பிடும்மோதே நமக்கு குமுதான்னு பேர் இல்லையே அப்டினு பல dolis feel பண்ண வெச்சவரு..Bollywood லையும் ஷாருக்கான் கூடயும் வில்லனா நடிச்சி bollywood fans ku favourite hero va மாறினாரு நம்ப மக்கள் செல்வன்..the boy in the next door தான் நம்ப vijay சேதுபதி என்னும் எதார்த்த நடிகன்..
Article By – RJ Vicky

