2017’ல GST அப்டின்ற ஒரு விஷயம் இந்தியால அறிவிக்கிறாங்க. விலைவாசி ஏறி போகுது. தியேட்டர்களும் விதிவிலக்கு இல்லை. மொத்த திரைத்துறையும் பயத்துல இருந்தாங்க, திரையரங்குகளுக்கு மக்கள் வருவாங்களா இல்லையானு.
அப்போ 21 ஜூலை 2017-ல ஒரு படம் தமிழ் சினிமால வருது. படம் பெயர் “விக்ரம் வேதா”. தியேட்டர்ல போய் உட்கார்ந்த உடனே மாதவன் முதல் சீன்லயே நடந்துட்டே பேசிட்டு இருப்பாரு… அப்போவே தெரிஞ்சிருச்சு இது சாதாரண படம் இல்லைனு.

படம் தொடங்கி கொஞ்சம் நேரம் எல்லாரும் வேதா வேதான்னு பேசுவாங்க ஆனா திரைல காட்ட மாட்டாங்க. எப்போடா காட்டுவிங்கன்னு Hype-ல இருக்குறப்போ வடை சாப்டுட்டு விஜய்சேதுபதி Entry குடுப்பாரு. அப்போ நாய் எல்லாம் அவர பாத்து கொலைக்கும் அவர் Devil-ன்ற மாதிரி Portray பண்ணிருப்பாங்க.
விக்ரமாதித்யன் வேதாளம் கதைல வேதாளம் ஒரு கதை சொல்லிட்டு அதுல ஒரு புதிர வெச்சுட்டு போறப்போ, விக்ரமாதித்யன் அத கண்டுபிடிப்பது மாதிரி திரைக்கதையை அவ்ளோ அழகா எழுதியிருப்பாங்க இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி.

படம் பார்த்த அத்தனை பேரும் விஜய்சேதுபதி பட்டய கிளப்பிட்டாருனு சொல்லிருப்பாங்க ஆனா அதுக்கு நம்ம மாதவன் Sir ah தான் பாராட்டனும். விக்ரம் கதாபாத்திரம் Underplay பண்ணதுனால தான் வேதா Performance மேல தெரிஞ்சுது. விக்ரம் வேதா படத்துல விக்ரம் கதாபாத்திரம் மூலமாக ஒரு விஷயம் சொல்லி இருப்பாங்க. நீ உன் வேலைல எவ்ளோ வேணாலும் உறுதியா இருக்கலாம்… ஆனா, ஓவர் Confident ah இருந்தா சறுக்கிருவிங்க.
வேதா கதாபாத்திரத்தின் மூலமா, நீ ஒருவாட்டி கத்தி எடுத்தா உன் முடிவு மட்டும் கத்தியால முடியாது… உன் கூட இருக்கவங்க முடிவும் காத்தியால தான் முடியும்னு சொல்லியிருப்பாங்க. படத்தோட டீசர் வந்தப்போவே யார் இசையமைப்பாளர்னு தேட வச்சுது Sam CS இசை. குறிப்பா வேதாவோட ஒவ்வொரு கதைக்கும் ஒரு ஒரு இசைமுறைய மாத்தி மாத்தி போட்டுருப்பாரு . விக்னேஷ் சிவன் வரிகள்ல கருப்பு வெள்ளை பாடல் யாராலும் மறக்க முடியாது!

இப்டி ஒரு தரமான படம் தயாரிச்ச திரு. சசிகாந்த் From YNot Studios-க்கு நன்றிகள் பல. 6 Years of விக்ரம் வேதா, இன்னும் 60 வருஷம் ஆனாலும் தமிழ் சினிமா மறக்க முடியாத ஒரு சம்பவம்!