சிவ பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற இரவாக கருதப்படுவது சிவராத்திரி .
இந்த நாளில் சிவ பெருமானை வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் ஏற்படும் என்பது நம்பிக்கை. பாவங்கள் நீங்கி, வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை, தன் கழுத்தில் அடக்கி உலகத்தை காத்தார் சிவன். இந்நிகழ்வு நடந்த மாசி தேய்பிறை சதுர்த்தசி நாளே மகாசிவராத்திரி. இதை மாசியில் விசேஷமாகவும், மாதந்தோறும் சதுர்த்தசியன்று மாத சிவராத்திரியாகவும் வழிபடுகிறோம்.
சிவ பெருமானுக்குரிய எட்டு விரதங்களில் ஒன்றாக சிவராத்திரி விரதம் கருதப்படுகிறது.
மாத சிவராத்திரி என்பது வருடத்தின் அனைத்து மாதங்களும் சிவன் மற்றும் பார்வதி தேவியை வழிபட வேண்டும் என்பதற்கான நாளாக குறிப்பிடப்படுகிறது. அதே சமயம், மாசி சிவராத்திரி என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு வருடத்தின் 12 சிவராத்திரிகள் நிறைவடைந்த பிறகு வரும் சிவராத்திரி, மாசி மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது .
மற்ற மாதங்களில் வரும் சிவராத்திரியில் சிவ பெருமானை வழிபட தவறி இருந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி அன்று வழிபட்டால் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.