நம் முன்னோர்கள் மலைகளில் கோயில்களை அமைத்து வழிபாடு செய்ததற்கு ஆன்மீகம் மட்டும் காரணமல்ல. அறிவியல் காரணமும் இருக்கிறது.
நம்முடைய ஆரோக்கியம் அதிலே நிரம்ப இருக்கிறது. மலைப்பாதையின் இருபுறமும் வனம் போல் இருக்கும் மூலிகைகள் மீது பட்டு வரக்கூடிய காற்று மருத்துவ குணம் கொண்டது.
அந்த காற்று உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சித் தரக்கூடியது.
மேடு பள்ளங்களில் ஏறி இறங்குகிற போது தசைகள் வலுவடையும். தேவையற்ற கொழுப்பு சதை கரைந்து போகும். காலுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கக்கூடும். வியர்வை வெளியேறும். நல்ல பசி உண்டாகும்.
மலைப்பாதையில் இருக்கக்கூடிய ஊற்று சுனை நீரில் மருத்துவ குணம் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட இயற்கையான சூழலில் நடந்து சென்று மருத்துவ குணத்தை பெற வேண்டும் என்பதற்காகத்தான், முன்னோர்கள்
மலைகளில் கோயில்களை அமைத்தார்கள்.
மலைக் கோயில்களுக்கு நாம் சொல்லும் போது மனம் முழுவதும் இறை சிந்தனையோடு நாம் நடந்து செல்வது என்பது தியானத்திற்கு ஈடானது என்கிறார்கள். மனம் அடங்கினால் உடலுக்கும் நல்லது, உள்ளத்துக்கும் நல்லது.
ஆனால், நாம் மலைக் கோயில்களில் வாசல் வரை செல்வதற்கு ஏதாவது வசதி இருக்கிறதா? என்று மலைக்கோயி ல்களுக்கு செல்லும்போது தேடுகிறோம். இது சரியானது அல்ல.
முடியாதவர்களும் முதியவர்களும் மட்டுமே அப்படிப்பட்ட வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மலையேறி சுவாமி தரிசனம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் “மேலான ஆரோக்கியம்” தருவது என்பதனை உணர்த்திடவே மலை மேல் கோயில்கள்.
“சூரியோதயம் “என். செல்வராஜ், கோவை

