கோவிலில் பூஜை நடப்பதை மணி அடித்து தெரிவிப்பது வழக்கம்.
சிவபூஜையில் நந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட மணியும்,பெருமாள் பூஜையில் சங்கு, சக்கரம்,கருடன் குறிக்கப்பட்ட மணியும் இடம் பெற்று இருக்கும்.
நைவேத்தியம் தீபாராதனை நேரத்தில் வேகமாக மணி ஒலிப்பதின் மூலம் தெய்வீக சக்தி எங்கும் பரவும்.
கடவுளின் முன் பிரசாதம் படைக்கும் போது, ” கடவுளே…. இந்த உணவுப் பொருள் எல்லாம் உன் அருளால் கிடைத்தது” என்பதை அறிவுக்கும் விதத்தில் மணி ஒழிக்கப்படுகிறது.
கவனச்சிதறல் ஏற்படாமல் மனம் முழுமையாக வழிபாட்டில் ஈடுபடவும், மணியோசை துணை செய்கிறது. மணியுடன் சேர்ந்து பல்வேறு வாத்தியங்களும்
இசைக்கப்படும்.
இதனால் தேவையற்ற பேச்சு, அமங்கல சொற்களோ காதில் விழ வாய்ப்பு இல்லாமல் போகும்.
Article by – “சூரியோதயம்” என். செல்வராஜ்,கோவை.

