“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா” என்னும் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல் வரி நம்மால் போற்றப்பட்டு வருகிறது. எனினும் ஒரு மங்கையின் மரியாதையும்,தேவைகளும், அவளின் விருப்பு வெறுப்புகளும் இந்த சமூகத்தையே சார்ந்தே உள்ளதன் காரணம் என்ன என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.
இந்திய சட்டத்தில் பெண்களுக்கு சமஉரிமை கொடுக்க பட்டிருந்தாலும் சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமையும் மரியாதையும் இன்றும் பல இடங்களில் மறுக்கப்படுகிறது. ஆண்களை கொண்டு சேரும் சிறந்த கல்வியும், சுய மரியாதையும்,சொத்துரிமையும் பெண்களுக்கும் கிடைக்க படவேண்டும் மேலும் பெண்களின் அடிப்படை பொருளாதார சுகந்திரமும் கிடைக்க பட வேண்டும் என்பதே பெண்களின் அதிகபட்ச சம உரிமையின் அடிப்படை தேவையாக உள்ளது.
ஆண்களின் படிப்பு என்னும் பொழுது professional courses பற்றி யோசிக்கும் பெற்றோர்கள் பெண்களின் படிப்பு என்னும் நிலையில் ” பெண் பிள்ளைக்கு ஏன் அவ்ளோ பெரிய படிப்பு?” என கேட்பது ஏன். பெண்களுக்கும் படிப்பு தேவை அதுவும் அவர்கள் விரும்பிய படிப்பை அவர்களுக்கு வழங்குவதே பெண்களுக்கான கல்வி சம உரிமை.
வீட்டு வேலைகள் நம் வாழ்வியல் வேலைகள் ஆகும் அது பெண்களுக்கானவை மட்டும் அல்ல அனைவருக்குமானது அவ்வண்ணம் வீட்டு வேலைகள் பெண்களுக்கானவை மட்டுமே என பெண்கள் தலையில் கட்டுவது தவறாகும்.திருமணம் என்னும் பெயரிலும் கலாச்சாரம் என்னும் பெயரிலும் பல இடங்களில் பெண்கள் அடக்கபடுகிறார்கள் அங்கே பெண்களின் அடிப்படையான சில ஆசைகளும் அடக்க படுகிறது, அவ்வித அடக்குமுறை தவிர்க்க பட வேண்டம்.
வேலைகளிலும் இந்த இந்த வேலைகள் ஆண்களுக்கான வேலை எனவும் இந்த இந்த வேலை பெண்களுக்கான வேலை என பிரித்து வைத்து இருத்தல் மாற்றப்பட வேண்டும். உதாரணமாக Teaching, banking, cooking, nursing போன்ற வேலைகள் பெண்களுக்கானவை மற்றவை ஆண்களுக்கானவை என பிரித்து பார்த்தல் மாறுதல் வேண்டும்.
பெண்கள் தனக்கென செய்துகொள்ளும் அனைத்தும் சுயநலமாகவே கூறப்படுகிறது. இங்கு பெண்களுக்கான ஆசைகள் சுயநலமாக பார்த்தல் மாறுதல் வேண்டும். பெண்களுக்கான பொறுப்புகள் என பலதும் உள்ளது, பெண்கள் பொறுப்புகளை ஏற்று பார்க்கும் நேரம் அவர்கள் அதில் தனித்து போராடி வெற்றி அடைகிறார்கள், எவ்வித வேலைகளிலும் போராட்டங்களை எதிர்கொண்டு பெண்களால் தனித்து சாதித்திட முடியும். எத்தையும் சரிசமமாக பார்ப்போம்,பெண்களுக்கான மரியாததையை வழங்குவோம் ,உடல் ரீதியாக பெண்கள் மேற்கொள்ளும் வலிகளை புரிந்துகொள்வோம்,சமுதாயத்தில் சமஉரிமை அளிப்போம், அன்பை பகிர்வோம்.
Article By – RJ VIDHU, SALEM