Specials Stories

World Chocolate Day 2025: சாக்லேட் எடு, ஸ்வீட்டா இரு, ஸ்மைல் பண்ணு..!

World Chocolate Day 2025: சாக்லேட் எடு, ஸ்வீட்டா இரு, ஸ்மைல் பண்ணு..!
World Chocolate Day 2025: சாக்லேட் எடு, ஸ்வீட்டா இரு, ஸ்மைல் பண்ணு..!

“சாக்லேட்” இந்த வார்த்தைய பிடிக்காத ஆள் இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க. ஒரு வார்த்தைல கவிதை சொல்லுங்கனு பசங்ககிட்ட கேட்ட “அம்மா”னு சொல்ற மாதிரி , குழந்தைங்க கிட்ட கேட்டா கண்டிப்பா சாக்லேட்னு தான் சொல்லுவாங்க. இது இந்த காலத்தில மட்டுமில்ல பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி இருந்தே நடக்குறது தான்.

Europe-லருந்து 1550 வருடம், 16வது நூற்றாண்டு காலக்கட்டத்தில Origin ஆன சாக்லேட் இன்னைக்கு உலகம் முழுக்க எல்லாரோட விருப்பான snacks-சா, dessert-ட்டா, Beverage-ஜாயிருக்கு. சாக்லேட்டோட பூர்வீகமா நம்பப்படுற europe July 7ம் தேதிய உலக சாக்லேட் தினமா கொண்டாடுறாங்க.

ஏன் சாக்லேட்னா எல்லாருக்கும் பிடிக்குதுனா?

அந்த sweetness , light bitter taste, அப்பிடியே அது melt ஆகுற texture, சாப்பிடுறப்போ நம்ம வாய்ல சாக்லேட் melt ஆகும் போது மனசும் கூட melt ஆயிடும் போல இருக்கும். அப்பறம் chocolateல இருக்குற sugar, fat, cocoa mix நம்ம brainக்கு இன்னும் சாப்பிடு சாப்பிடுனு சிக்னல் அனுப்பும், அதனால தான் குழந்தைங்க சாக்லேட்க்கு அடிமையா இருங்காங்க. சாக்லேட் சாப்பிடும்போது dopamine, serotonin எல்லாம் release ஆகும். அது தான் நம்ம mind-ட relax ஆக்கும்.

கூமாப்பட்டி தண்ணி

உங்க depression, Stress, Pain, Love problem, Tension இதெல்லாம் குறைச்சு மறக்க வைக்குமானு தெரியாது ஆனா ஒரு நல்ல டேஸ்டியான சாக்லேட் மனச ரிலாக்ஸ் ஆக்கும். சாக்லேட் சாப்பிட்டா நமக்கு அதுல இருக்க endorphins, Serotin ரீலீஸ் ஆகி stress-ச குறைக்கும், carbohydrates and sugar நம்ம உடம்புக்கு energy கொடுக்கும். Blood flow அதிகமாக்கி brain-ன sharpப்பா வச்சுக்கும், Heartக்கு ரொம்ப நல்லது, சாக்லேட்ல இருக்க Anti oxidants Skin Damage தடுத்து Skin-ன Glow ஆக்கும். சாக்லேட்ல உள்ள Zinc, Selenium, Magnesium மாதிரியான மினரல்ஸ் நம்ம Immune Power-ர அதிகமாக்கி பல நோய்கள்லருந்து பாதுகாக்கும்.

முக்கியமா லவ் பண்றவங்க ஏன் அவங்க லவ்லருக்கு சாக்லேட் தராங்க தெரியுமா? சாக்லேட்ல லவ் ஹார்மோன தூண்ட கூடிய oxytocin அதிகமா இருக்கு.அதனால தான் காலங்காளமா காதலர்கள் எல்லாரும் சாக்லேட் வாங்கி கொடுத்துட்டு இருக்காங்க.

நீங்க சொன்னதெல்லாம் கேக்க நல்லாயிருக்கு அப்பறம் ஏன் doctors, parents எல்லாரும் சாக்லேட் சாப்பிட்டா திட்டுறாங்கனு ஒரு கேள்வி வருதா…? ஆமா அதிகமா சாக்லேட் சாப்பிட்டா உடம்புக்கு கெட்டது தான்…!
அப்ப இவ்வளோ நேரம் சொன்னதெல்லாம் பொய்யா…? போயானு…! கோவப்படாதீங்க. நான் சொன்ன நல்லதெல்லாம் சாதாரண சாக்லேட்ல இருக்காது , டார்க் சாக்லெட்ல தான் இருக்கும். ஒரு ரூபாய்க்கு கிடைக்குற சாக்லேட் சாப்பிடவே கூடாதா அது ரொம்ப கெட்டதானா? கிடையாது அளவா சாப்பிட்டா எதுவும் தப்பில்ல. ஆனா ஆரோக்கியம் தரக்கூடிய அளவு, அதுல எதவும் இருக்காது. அதனால தான் டார்க் சாக்லெட் விலையும், நன்மையும் அதிகமாயிருக்கு.

உலகத்துலையே விலை அதிகமான சாக்லெட்னா முதல் மூணு இடத்துல இருக்குறது USA சேர்ந்த La Madeline au Truffe by Knipschild ஒரு பீஸ் அதாவது 45 grams சாக்லேட் விலை சுமார் $250 (₹20,000-₹22,000) வரை இருக்கும்.

அடுத்து ரெண்டாவதா Ecuador நாட்டோட To’ak Chocolate 50 கிராம் உள்ள ஒரு பாக்கெட் சுமார் $300-$400 (₹25,000-₹35,000) வரை இருக்கும்.

மூணாவதா நம்ம இந்தியாவோட Fabelle Trinity Truffles Extraordinaire இது ஒரு பீஸ்-சா இல்லாம ஒரு box-சா விப்பாங்க ,இதோட விலை ₹4.3 lakh (சுமார் $5,000).இந்த சாக்லேட் Limca Book of Records ல் கூட இடம்புடிச்சுச்சு.

இப்படி நாம விருப்பி சாப்பிடக்கூடிய சாக்லேட் 25பைசால ஆரம்பிச்சு லட்சக்கணக்குல விற்பனை ஆகிட்டுயிருக்கு. ஆனா சாதாரண சாக்லேட்டோ, டார்க் சாக்லெட்டோ சந்தோஷத்துக்காக கொஞ்சமா சாப்பிட்டா பிரச்சனை இல்லை, அதிகமா சாப்பிட்டா நல்லதில்ல.

சாக்லேட் இன்னைக்கு பல அவதாரமா மாறியிருக்கு !!கேக் , மில்க்க்ஷேக் ,ஜீஸ்,காபி, ஐஸ்கிரீம், டோனட்ஸ், சாஸ், பேஸ்ட்ரி, பிஸ்கெட்ஸ் இப்படி சொல்லிட்டே போகலாம். தளபதி விஜய் சொல்ற மாதிரி அந்த காலமோ இந்த காலமோ இவரு பிடிச்சிட்டாரு கிட்ஸ் எல்லாம் பிடிச்சிட்டாரு.

காதலா சொல்லவும் , பிறந்தநாளை கொண்டாடவும், மன அழுத்த கொறைக்கவும் இப்படி நமக்கு all time Friend-டாயிருக்க சாக்லேட்க்கு உலக சாக்லேட் தினத்துல சூரியன் FMன் பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆமா இதுக்கு சாக்லேட் கிட்ட எப்பிடி சாக்லேட் கேக்குறது..

Article By – RJ SRINI